றிசாத் பதியுதீனின் கம்பஹா மாவட்ட இணைப்பாளராக தொழிலதிபர் எம்.என்.சிராஸ் முஹம்மத் நியமனம்

???????????????????????

இரசாத் ரஹ்மத்துல்லாஹ்  

கம்பஹா: கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் கம்பஹா மாவட்ட இணைப்பாளராக தொழிலதிபர் எம்.என்.சிராஸ் முஹம்மத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நியமனக கடிதத்தினை அமைச்சரிடம் இருந்து இன்று மாலை பெற்றுக் கொண்டார்.

முஹம்மத் சிராஸ் நீர்டிகொழும்பு அலிஹிலால் மத்திய கல்லுாரியின் பழைய மாணவராவார்.நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீனை தேசிய தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டவர். அதே வேளை பல்வேறு சமூக நல அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ள சிராஸ் முஹம்மத்இசிராஸ் பவுண்டேஷனின் பணிபபாளர் நாயகமுமாக கடமையாற்றி வருகின்றார்.

குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் வாழும் மக்களின் தேவைகளை இனம் கண்டு அதனை நிறைவு செய்து கொடுக்கும் வகையில் அமைச்சர் றிசாத் பதீயுதீன் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் தமது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முசலி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எம். பைரூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

???????????????????????

Published by

Leave a comment