ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச சபைக்கு சொந்தமான மாஞ்சோலை 207ஏ கிராம சேவையாளர் பிரிவில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை கிராம பொது நூலகம் இன்று புதன்கிழமை 23.10.2013 காலை 8.00 மணிக்கு திறக்கவேண்டிய போதும் காலை 10.30 மணியாகியும் நூல் நிலையம் திறக்கப்படவில்லை.
இதனால் நூல் நிலையத்திற்கு நாளிதழ்களை வாசிப்பதற்கு வருகைதந்த வாசகர்கள் ஏமாற்றம்மடைந்தனர். தமக்கு ஏற்பட்ட ஏமாற்ற நிலை குறிந்து பிரதேச வாசிகளும்,வாசகர்களும் அவ்விடத்தில் இருந்தே தொலை பேசி மூலமாக குறிந்த நூல் நிலையம் திறக்கப்படாமை குறிந்து ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீடுக்கு அறிவித்தனை அடுத்து தவிசாளர் அவ்விடத்துக்கு அவசரகெதியில் வருகை தந்தார்.
நூல் நிலையத்துக்கு முன்பாக கூடி நின்ற வாசகர்களிடம் நூல் நிலையத்தின் அன்றாட செயற்பாடு குறித்து தவிசாளர் வினவினார்.
நூல் நிலையத்தின் செயற்பாடுகள் குறிந்து விளக்கமளித்த வாசகர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
குறிந்த மாஞ்சோலை பொது நூலகத்தில் பத்திரிகை ஒழுங்குகள் மோசமான முறையில் உள்ளதாகவும், உரிய நேரத்திற்கு நூல் நிலையம் திறக்கப்படாமை,காலம் கடந்த பத்திரிகைகளை நூல் நிலையத்தில் பெற்றுக்கொள்வதில் அதிகளவான சிரமங்களை எதிர் கொள்வதாகவும்,ஒரு நாள் திறந்தால் ஒரு நாள் குறிந்த நூல் நிலையம் மூடப்பட்டிருக்கும் என்றும் வாசகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனை கேட்டறிந்த தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் உடனே சம்பத்தப்பட்ட அதிகாரிகளை நூல் நிலைய விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவ்விடத்தில் இருந்தே தொலை பேசி ஊடாக சம்பத்தப்பட்ட அதிகாரிகளை கேட்டு கொண்டார்.
குறிந்த நூல் நிலையமானது இக்கிராமத்தின் அவசிய தேவையாக கருதப்பட்டு வந்த வேளையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர்சாலி அதனை கவனமெடுத்து புனர் நிர்மாணம் செய்து கொடுத்திருத்தார்.
இருப்பினும் ஒரு சிலமாதங்களாக சிறப்பாக இயங்கிய இந்;நூல் நிலைய செயற்பாடுகள் பொறுப்பு சுமத்தப்பட்ட பொறுப்பற்ற நூலகரின் கவனயீனத்தால் இது வரைகாலமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்திருந்தது.
இவ்விடயம் இன்று தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனை அடுந்து நாளை முதல் நூலகம் சிறப்பாக இயங்கும் என வாகர்களும்,பொதுமக்களும் எதிர்பாக்கின்றனர்.





Leave a comment