காத்தான்குடி: ஐக்கிய நாடுகள் சபை தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மத்திய கல்லூரியில் ஐ.நா. சபை தினம் இன்று 25.10.2013 அன்று கல்லூரியின் நூலக கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. உயர்தரப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் கப்டன் ULA. முபாறக் அவர்கள் தலைமை வகிக்க கிழக்குப் பல்கலைக் கழக அரசியல் துறை விரிவுரையாளர் திருவாளர் A.யோகராஜா (M.Phil) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஐக்கிய நாடுகள் சபை அதன் நோக்கம், செயற்பாடுகள் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.
அத்துடன் கல்லூரியின் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் மற்றும் உயர்தரப் பிரிவு ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் ஐ.நா. சபை தொடர்பான போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

Leave a comment