காத்தான்குடி: ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் வைபவமும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் காத்தான்குடி கிளைத் தலைவர் இஸட் எம். சஜி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கரைப்பந்தாட்டம், பாடல், கவிதை, மரபு ரீதியான விளையாட்டுக்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அவர்களுடைய விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கிளைத் தலைவர் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.





Leave a comment