Category: Your Kattankudy
-
பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்
– MJ டாக்கா: பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்குமிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி டாக்கா மைதானத்தில் உள்ளுர் நேரப்படி இன்று காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகிறது.
-
இ-சிகரெட்டை 18 வயதுக்கு கீழ் தடைசெய்ய பிரிட்டன் சட்டம்
லண்டன்: இங்கிலாந்தில் இலக்ட்ரோனிக் சிகரெட்டுகளை (மின்னணு மூலம் புகை போன்ற வாயுவை உருவாக்கும் நவீன சிகரெட்) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடைசெய்து பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது. இ – சிகரெட் மூலம், இளம் பராயத்தினர் நிக்கோட்டின் சுவைக்கு பழகிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
மிருகங்களை வேட்டையாடி வந்த 13 அடி இராட்சத முதலை ஆரையம்பதி ஆற்றங்கரை கரையோரப்பகுதியில் கண்டுபிடிப்பு
பழுலல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி -1 தி.எஸ். ஊர் வீதி ஆற்றங்கரை கரையோரப்பகுதியில் ஆடு, மாடு, நாய் போன்ற மிருகங்களை வேட்டையாடி வந்த 13 அடி இராட்சத முதலையை இறந்த நிலையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலய அதிகாரிகளினால் காத்தான்குடி பொலிசாரின் உதவியுடன் 26-01-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
ஐந்தாண்டு அபிவிருத்திட்டம் மட்டக்களப்பு செயலகத்தினால் தயாரிப்பு
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் அமுல்படுத்துவதற்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டமொன்று மாவட்ட செயலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நேரத்தில் 2 கள்ளக்காதல்: பெண்ணுக்குத் தீவைத்த வாலிபர் உட்பட இருவரும் கருகி பலி!
– SHM சென்னை: ஒரே நேரத்தில் தன்னுடனும், இன்னொருவருடனும் கள்ளக்காதலில் திளைத்த பெண் மீது ஆத்திரம் கொண்டார் வாலிபர். எவ்வளவு சொல்லியும் அடங்காத அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார். அப்போது அந்தப் பெண், தனக்கு தீவைத்த காதலனையும் கட்டிப் பிடித்ததில் இருவருமே தீயில் கருகி பலியானார்கள்.
-
குளியறையில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபோய் அழகி காசன்ட்ரா!
– SHM லொஸ் ஏஞ்சலெஸ்: முன்னாள் பிளேபோய் இதழின் மொடல் அழகி காசன்ட்ரா லின் ஹென்ஸ்லி அதிக அளவிலான போதைப் பொருளை உட்கொண்டதால் மரணமடைந்தார். அவருக்கு வயது 34 ஆகும்.
-
காத்தான்குடியும் தலைக் கவசமும்…
– M-16 காத்தான்குடி: இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் ஊராக காத்தான்குடி திகழ்கிறது. வர்த்தக மற்றும் அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களில் பெரும்பாலான மக்கள் அங்கம் பெறுகின்றனர்.
-
கிழக்கு மாகாண ஆளணி நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு
திருகோணமலை: கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தின் ஆளணி நியமனத்தில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் விவாதிப்பதற்காக தன்னால் அவசர பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் கூறுகின்றார்.
-
‘சிரியா செல்லும் இளம் முஸ்லிம்கள் பிரிட்டனையும் தாக்கலாம்’
லண்டன்: சிரியாவில் போராடுவதற்காக பிரிட்டனிலிருந்து செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியதும் பிரிட்டனிலும் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக் கூடும் என்று முன்னணி பிரிட்டிஷ் முஸ்லிம் விவகார அவதானி ஒருவர் கூறியுள்ளார்.
-
‘இண்டர்நெட்’ கடவுளின் பரிசு: போப் பிரான்சிஸ்
– AF-60 வத்திக்கான்: சுலபமாக தொடர்பு கொள்ள வைப்பதன் மூலம் உலகத்தையே குடும்பமாக மாற்றியுள்ள இண்டர்நெட் கடவுள் தந்த பரிசு எனப் பாராட்டியுள்ளார் போப் பிரான்சிஸ்.
-
சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் கால் மூட்டில் நூற்றுக்கணக்கான தங்க ஊசிகள் கண்டுபிடிப்பு
– SHM சியோல்: மூட்டு வலியால் அவதிப்பட்ட தென் கொரியப் பெண் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கால் மூட்டுக்குள் நூற்றுக்கணக்கான தங்க ஊசிகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
-
ஆப்கானில் 5 கிரிக்கட் வீரர்கள் சுட்டுக் கொலை!
– SHM காபூல்: ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழுவினரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சுட்டதில் கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.