‘சிரியா செல்லும் இளம் முஸ்லிம்கள் பிரிட்டனையும் தாக்கலாம்’

140125111445_syria_training_304x171_reuters[1]லண்டன்: சிரியாவில் போராடுவதற்காக பிரிட்டனிலிருந்து செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியதும் பிரிட்டனிலும் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக் கூடும் என்று முன்னணி பிரிட்டிஷ் முஸ்லிம் விவகார அவதானி ஒருவர் கூறியுள்ளார்.

கடுமையான வன்முறைகளுக்குப் பழகிப் போனவர்களை மீண்டும் பிரிட்டிஷ் சமூகத்தில் இணைப்பது என்பது மிகக்கடினமாக இருக்கும் என்று மொஹமட் அன்சார்  தெரிவித்தார்.

சிரியாவின் மோதலுடன் தொடர்புடைய பயங்கரவாதக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரிட்டனில் கைதாவோரின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் காவல்துறை எச்சரித்துள்ள நிலையில், இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

சிரியாவில் பயங்கரவாத உதவி நடவடிக்கைகளுக்காக லண்டனில் பணம் ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிரியாவிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பிரிட்டிஷ் பிரஜைகள் நாட்டின் குடிவரவு எல்லைகளிலேயே தடுக்கப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

– BBC

Published by

Leave a comment