மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் அமுல்படுத்துவதற்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டமொன்று மாவட்ட செயலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முறையாக அமுல்படுத்துவதற்கு வசதியாக இந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
விவசாயம் மற்றும் மீன்பிடியை பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் மஹிந்த சிந்தனை கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் பல்வேறு துறைசார்ந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கத்துடன் இந்த ஐந்தாண்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம்- உட்கட்டமைப்பு- அபிவிருத்தி- அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட 30 துறைகளில் நிலையான ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவது இந்த திட்டத்தின் மற்றுமொரு நோக்கம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.lk
Published by
![130524162123_batticaloa_entrence_624x351_bbc_nocredit[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/130524162123_batticaloa_entrence_624x351_bbc_nocredit1.jpg?w=150&h=84)
Leave a comment