‘இண்டர்நெட்’ கடவுளின் பரிசு: போப் பிரான்சிஸ்

pope-francis_2541160b[1]– AF-60

வத்திக்கான்: சுலபமாக தொடர்பு கொள்ள வைப்பதன் மூலம் உலகத்தையே குடும்பமாக மாற்றியுள்ள இண்டர்நெட் கடவுள் தந்த பரிசு எனப் பாராட்டியுள்ளார் போப் பிரான்சிஸ்.

கடந்த 1967ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க தேவாலயங்களில் உலக தொலைதொடர்பு தினம் கொண்டாடப் பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு நேற்று போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

இண்டர்நெட் என்பது கடவுளின் பரிசு. அதன் மூலம் உலகமே ஒரு குடும்பம் போல் உருவாகிறது. ஆனால் அதை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது சாத்தானின் வேலை என்றார்.

இண்டர்நெட் கடவுளின் பரிசு. அதனை நல்ல பயன்பாடுகளுக்காக உபயோகிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Published by

Leave a comment