ஆனமடுவ: ஆனமடுவ – பள்ளம வீதி வென்தகடுவே பிரதேசத்தில் ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று பலியானதுடன் மேலும் 9 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று (15) மாலை 7.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளானவர்களில் சிறுவர்கள் நால்வரும், பெரியவர்கள் 5 பேரும் அடங்குவதாக பொலீஸார் தெரிவித்தனர். காயமுற்ற அனைவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுமி உயிரிழந்ததாக பள்ளம பொலீஸார் தெரிவித்தனர்.
பள்ளம பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Published by

Leave a comment