சவால்களுக்கு மத்தியிலான பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி

unnamed (1)ரைஸ்

கிண்ணியா: பெரியதொரு இடைவெளி தாண்டி வெகுவிமர்சையாக இடம்பெற்ற கிண்ணியா பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது. பேரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை அதிபர் முகம்மது தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி பாடசாலையின் புதிய நிகழ்வாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இல்ல விளையாட்டுப் போட்டியானது அனைவரின் மனதையும் கவரக்கூடியதாக அமைந்ததோடு அனைவரினதும் பாராட்டினையும் பெற்றுக்கொண்டமை பாராட்டுக்குரியதாக அமைந்தது. இங்கு அதிதகளை பேண்ட் இசையுடன் மைதானத்திற்கு அழைத்து வந்தமை வரலாற்று நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விளையாட்டுப் போட்டிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப். ஏ. மஜீத், கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், வலயக்கல்வி பணிப்பாளர் சேகு அலி, கோட்டக் கல்வி அதிகாரி அகது ஆசிரியர், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

unnamed

unnamed (1)

Published by

Leave a comment