மட்டு  விகாரைக்கு வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒரு தொகுதி பணம் – மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் அன்பளிப்பு!

batticalao bilal– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: சிங்கள முஸ்லிம் மதத்தவர்களிடையே இன நல்லுறவை பேணும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒரு தொகுதி பணம் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேற்படி மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட பணத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 12-05-2014 நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்றது.

இதன் போது வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒரு தொகுதி பணம் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் தொழிலதிபர் கலீல் ஹாஜியாரினால் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேரரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு தமிழ்,முஸ்லிம்,சிங்கள மதத்தவர்களிடையே இன நல்லுறவை பேணும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

batticalao bilal

Published by

Leave a comment