சிட்னி: மலேசிய விமானத்தின் விபத்து யாராலும் மறக்க முடியாத ஒன்று இச்சம்பவம் உலகத்தையே உலுக்கியது. இந்நிலையில் இந்த விமானத்தை தேடுவதற்காக அவுஸ்திரேலியா மட்டும் சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி ஐந்து இந்தியர்கள் உட்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென நடுவானில் மாயமானது. தற்போது அந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
செவ்வாய் கிழமை அவுஸதிரேலியா அரசு வெளியிட்ட அறிக்கையிஸ் மலேசியாவின் MH 370 விமானத்தை தேடும் பணியில் கடந்த ஜூன் 30ஆம் தேதி முதல் ஈடுப்பட்டது. இதற்கு ஆஸ்திரேலிய அரசு 90 மில்லியன் டொலர் செலவிட்டதாக தெரிவித்துள்ளது. இத்தேடுதல் வேட்டையில் அவுஸ்திரேலியா உட்பட சீனா, அமெரிக்கா, இந்தியா, மலேசியா போன்ற 17 நாடுகள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
Published by

Leave a comment