தங்காலையில் 58 ஏக்கரில் நவீன சிறைச்சாலை

Jail%20Bars%20and%20Cuffs[1]கொழும்பு: தங்கால அகுனுகொலபெலஸ்ஸவில் 4996 மில்லியன் ரூபா செலவில் புதிய சிறைச்சாலையொன்றை நிர்மாணிக்க புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. 58 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிறைச்சாலை நிர்மாணிப்பதற்காக நாளை மறுதினம் (16) அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

சிறைச்சாலை நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவு செய்ய உள்ளதோடு இந்த சிறைக்கு வெலிக்கடை மற்றும் தங்கல்ல ரிமாண்ட் சிறையிலுள்ள சுமார் 1000 கைதிகள் மாற்றப்படுவர் என அமைச்சு குறிப்பிட்டது.

புதிய சிறைச்சாலையில் 2 ஆயிரம் கைதிகளை தடுத்து வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதோடு சிறைச்சாலை ஆஸ்பத்திரி, தொழிற் பயிற்சி நிலையம், கைத்தொழில் கட்டிடம் 140 விடுதிகள், 400 மீட்டர் ஓட்டப்பாதையுடன் கூடிய மைதானம், நீச்சல் தடாகம் உள்ளக விளையாட்டரங்கு, சிறைச்சாலை உற்பத்திகளை விற்பனை செய்யும் நிலையம் என்பனவும் இங்கு நிர்மாணிக்கப்பட உள்ளன.

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைப்பதற்காக புதிய சிறைச்சாலைகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

Published by

Leave a comment