அகதி அந்தஸ்து கோருவதற்காக ஆபிரிக்கர்கள் ஐரோப்பாவிற்குள் குதிக்கும் படத்தொகுப்பு!

bor– MJ

லண்டன்: ஆபிரிக்க நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, பெரும்பாலான ஆபிரிக்க நாட்டவர்கள் தரை வழியாகவும், கடல் மார்க்கமாகவும் ஐரோப்பா நாடுகளுக்கு அத்துமீறி நுழைந்து தங்களது புகழிடக்கோரிக்கையை முன்வைப்பதற்காக, தங்களது உயிர்களைப் பணயம் வைக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன.

ஆபிரிக்காவிலிருந்து மொரக்கோ வரும் இவ் அகதி அந்தஸ்த்து கோரிக்கையாளர்கள், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் எல்லைப் பாதுகாப்புக் கம்பங்களில் ஏறி, தருணத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

எல்லைக் கம்பங்களிலும், வேலிகளிலும் இருக்கும் இந்நபர்களைப் பிடிக்க முடியாது. இவர்கள் ஏதாவதொரு நாட்டிற்குள் காலடி எடுத்துவைக்க வேண்டும்.

இதனால் இவர்கள் தங்களது நாட்டிற்குள் காலடி எடுத்து வைப்பதைத் தடுக்க பல முயற்சிகளை குறித்த ஐரோப்பிய நாடுகள் முயற்சித்தாலும், அத்துமீறி உயரமான கம்பங்களிலும், வேலிகளிலிருந்தும் இந்நாடுகளுக்குள் குதித்துவிடுகின்றனர்.

இவ்வாறு அத்துமீறி பலவந்தமாக நாட்டுக்குள் வருபவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைத்து பின்னர் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இவ்வாறான வேலிதாண்டிக் குதிக்கும் சம்பவங்கள் ஆபிரிக்க நாடுகளின் சமகாலப் பிரச்சினைகள், சிரியா மற்றும் எகிப்தின் கலவரங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள தலிபானின் அச்சுறுத்தல்கள் காரணமாக இவ்வாறான வேலிதாண்டிக் குதிக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பிரான்ஸ் குடிவரவுத் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.

கடல் மார்க்கமாக வரும் இவ்வாறான அகதி அந்தஸ்த்துக் கோரிக்கையாளர்கள் பலர் இத்தாலி கடலில் படகு மூழ்கி அண்மையில் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment