மக்கா: நேற்று வியாழன் இரவு, அல்லாஹ்வின் ஆலயமான கஃபத்துல்லாஹ்வை சவூதி அரேபிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், மஸ்ஜிதுல் ஹரம் ஆலயத்தின் இமாம்கள் மற்றும் அதன் சேவகர்கள் ஆகியோரால் ஸம்ஸம் நீர், பன்னீர் மற்றம் நறுமனங்களைக் கொண்டு கஃபதுல்லாஹ் கழுவப்பட்டது.
கஃபதுல்லாஹ் கழுவும்போது யாத்திரிகர்களில் ஒருவர் ‘கஃபதுல்லாஹ் கதவு விரைவில் திறக்கப்பட வேண்டும்’ என தனது தலையை வெட்டிக்கொண்டு கலவரத்தில் இறங்கியதில் ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் காயங்களுக்குள்ளானார்கள். இவர்களுள் மூவர் பெண்கள் என மக்கா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில், இச்சம்பவத்தை சில ஊடகங்கள் திரிபுபடுத்தி 3 பெண்கள் கொல்லப்பட்டதாக வதந்தியான செய்திகளைப் பரப்பியதாக சவுதிஅரேபிய அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
காயமடைந்த நால்வரும் மக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மக்கா பொலிஸ் பேச்சாளர் ஆதி அல் குறைஷி தெரிவித்துள்ளார்.
அல்லாஹ்வின் ஆலயமான கஃபதுல்லாஹ், வருடத்தில் இருமுறை கழுவி சுத்தம் செய்யப்படும். இதன்படி ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் மற்றம் ஷஃபான் ஆகிய மாதங்களில் கஃபதுல்லாஹ்வை சவுதி அரசு சுத்தம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment