Category: Your Kattankudy
-
அளுத்கம சம்பவம்… நகரசபை உறுப்பினர் பாக்கீர் சமர்ப்பித்த கண்டணப் பிரேரணையும் உரையும்
பழுலுல்லாஹ் பர்ஹான் அளுத்கம: அண்மையில் அளுத்கம, பேருவளை, தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் பொதுபலசேனா, சிங்கள ராவய போன்ற பௌத்த தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன குரோத நடவடிக்கைகளைக் கண்டித்து காத்தான்குடி நகரசபையின் விசேட கூட்டத்தில் நகரசபை உறுப்பினர் அல்ஹாஜ் HMM. பாக்கீர் சமர்ப்பித்த கண்டணப் பிரேரணையும் அது தொடர்பான உரையும்.
-
தர்கா நகர், அளுத்கம போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட குழு விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் அளுத்கம: தர்கா நகர், அளுத்கம பகுதிகளில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து விசாரித்து ஆறுதல் கூறவும், தேவைகள் அறிந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட குழுவொன்று அதனது பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்களின் தலைமையில் நேற்று 2014.06.18 ஆம் திகதி புதன் கிழமை சென்று வந்தது.
-
கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் பரிசளிப்பு விழாவும், ரமழான் மாத ஒன்றுகூடலும் நாளை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் பரிசளிப்பு விழாவும், ரமழான் மாத ஒன்று கூடல் நிகழ்வும் நாளை 20-06-2014 வெள்ளிக்கிழமை இரவு 8:15 மணிக்கு புதிய காத்தான்குடி அல்-மனார் அர் றாஷித் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
-
கட்டார் பனாரில் இஸ்லாமிய அகீதாவின் அடிப்படைகள் – தொடர் – வானவர்கள் – (மலக்குமார்கள்)
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தோஹா: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் 20-06-2014 இவ்வாரம் ‘இஸ்லாமிய அகீதாவின் அடிப்படைகள் – தொடர் வானவர்கள் – (மலக்குமார்கள்) என்ற தலைப்பில் நடைபெறும்.
-
‘வெற்றி இஸ்லாத்துக்கே’ என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 19-06-2014 இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
‘இன ஐக்கியத்திற்காக முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்’- மேர்வின் சில்வா
கொழும்பு: நாட்டில் சீர்கெட்டு வரும் சிங்கள – முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தாம் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் செய்ய விருப்பத்துடன் இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
-
வட்டரக்க விஜித தேரர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்
கொழும்பு: தேசிய பலசேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்கள், விஜித தேரரை கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். பாணந்துறை ஹிரனம பாலத்திற்கு அருகாமையில் விஜித தேரர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
-
காத்தான்குடியில் இரண்டாவது நாளாகவும் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு- பொலிசார் பாதுகாப்புக் கடமையில் குவிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அளுத்கம ,பேருவளை,தர்கா நகர் மற்றும் களுத்துறை பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தை கண்டித்து இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஓட்டமாவடி ,மட்டக்களப்பில் நகரில் முஸ்லிம் பகுதி போன்ற முஸ்லிம் பிரதேசங்களில்19 இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் மற்;றும் கடையடைப்பு என்பன இடம்பெற்றது.
-
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவரின் வீட்டில் கழிவு எண்ணெய் (ஒயில்) வீச்சு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவரும்,சமூக சேவையாளரும்,மட்டு-பிலால் எம்போரியத்தின் உரிமையாளருமான கே.எம்.எம்.கலீல் ஹாஜியாரின் வீட்டின் மீது 19-இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 12-40 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் (ஒயில்) வீசப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
-
போலி டிப்ளோமா சான்றிதழ் சமர்ப்பித்த பெண் கைது
கொழும்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்காக போலி ஆங்கில டிப்ளோமா சான்றிதழை சமர்ப்பித்த பெண் ஒருவரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடவத்தையைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவரே கோட்டை பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.
-
ஸ்பெய்ன் இரண்டாவது போட்டியிலும் அதிர்ச்சித்தோல்வி: உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறுகிறது!
– MJ றியோ: சற்று முன்னர் இடம்பெற்ற ஸ்பெய்ன் மற்றும் சில்லி அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண குழு லீக் போட்டியில் சில்லி அணியிடம் 2:0 எனும் கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவி, உலகக் கிண்ணப் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறுகிறது ஸ்பெய்ன்.
-
‘இனவெறியாட்டத்திற்கு தூபமிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்’
– பஹ்மியூஸூப் திருகோணமலை: அளுத்கம இனவெறியாட்டத்திற்கு தூபமிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதன் ஊடாக மாத்திரமே இன சகவாழ்வை ஏற்படுத்த முடியும். இவ்வாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை வெளியிட்டுள்ள கட்டண அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.