றியோ: சற்று முன்னர் இடம்பெற்ற ஸ்பெய்ன் மற்றும் சில்லி அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண குழு லீக் போட்டியில் சில்லி அணியிடம் 2:0 எனும் கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவி, உலகக் கிண்ணப் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறுகிறது ஸ்பெய்ன்.
குழு ‘பி’ யில் இரு போட்டிகள் விளையாடிய நிலையில் நெதர்லாந்து மற்றும் சில்லி அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முன்னணியில் இருக்கின்றன. ஸ்பெய்ன் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 23ம் திகதி இடம்பெற இருக்கின்றது.
நடப்பு உலக மற்றும் ஐரோப்பியச் சம்பியனான ஸ்பெய்ன், இம்முறையும் உலகக் கிண்ணத்தை வெற்றிபெறும் அணிகளுள் ஒன்றாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஸ்பெயினின் இந்த அதிர்ச்சித் தோல்வி ஸ்பெய்ன் நாட்டவர்களை மாத்திரமன்றி, உலக ஸ்பெய்ன் இரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.