கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் பரிசளிப்பு விழாவும், ரமழான் மாத ஒன்றுகூடலும் நாளை

katheebபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் பரிசளிப்பு விழாவும், ரமழான் மாத ஒன்று கூடல் நிகழ்வும் நாளை 20-06-2014 வெள்ளிக்கிழமை இரவு 8:15 மணிக்கு புதிய காத்தான்குடி அல்-மனார் அர் றாஷித் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி. ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹவும், கௌரவ அதிதியாக ஜாமிஅதுள் பலாஹ் அரபுக் கல்லூரியின் முதல்வர் ஷைகுல் பலாஹ் மௌலவி .எம்.ஏ. அப்துழ்ழாஹ் (ரஹ்மானி) ஹஸரத் அவர்களும், இன்னும் பல கௌரவ, சிறப்பு அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி. எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) ஜே.பி தெரிவித்தார்.

Published by

Leave a comment