மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவரின் வீட்டில் கழிவு எண்ணெய் (ஒயில்) வீச்சு

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவரும்,சமூக சேவையாளரும்,மட்டு-பிலால் எம்போரியத்தின் உரிமையாளருமான கே.எம்.எம்.கலீல் ஹாஜியாரின் வீட்டின் மீது 19-இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 12-40 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் கழிவு எண்ணெய் (ஒயில்) வீசப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் கழிவு ஒயில் வீச்சு சம்பவம் காத்தான்குடி -04 குறிச்சி இலங்கை மின்சார சபை காத்தான்குடி பிரதேச காரியாலய வீதியிலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அளுத்கம மற்றும் தர்கா நகர் சம்வத்தை கண்டித்து கடந்த செய்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்கள் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுஷ்டித்த காரணத்தால் மட்டு -முஸ்லிம் வர்த்தகர்கள் ஒன்று கூடி எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இன்று 19 வியாழக்கிழமை மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாமென எஸ்.எம்.எஸ். குறுஞ் செய்தி சேவை மூலம் அறிவித்ததையடுத்தே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் தெரிவித்தார்.

???????????????????????????????

இச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ரணசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு மீண்டும் மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்களை -இன்று 19 வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு எஸ்.எம்.எஸ். குறுஞ் செய்தி சேவை மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு மட்டக்களப்பு நகர முஸ்லிம் வர்த்தகர்கள் ஹர்த்தாலை அனுஷ்டித்து வருகின்றைமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment