‘எமது சிடி கெம்பஸ் தகவல் தொழிநுட்பத்தில் பாரிய மாற்றங்களைத் தோற்றுவிக்கும்’

media– எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: ‘தகவல் தொழிநுட்பத் துறையில் (IT) 400 க்கு மேற்பட்ட மாணவர்கள் எமது அல் மனார் சிடி கெம்பஸில் கற்கின்றமை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தினை உண்டுபண்ணும்’ இவ்வாறு காத்தான்குடி அல்மனார் அறிவியியற் கல்லூரியின் பணிப்பாளர் எம்.எஸ் எம்.நௌசாத் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம் மும்தாஸ் மதனி தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ‘இன்று தொழிநுட்ப துறை மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை சமாளிக்க மாணவர்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே அல் மனார் நிறுவன கல்வி கலாச்சார சமூக பிரிவானது வருமானத்தினை நோக்காகக் கொள்ளாது பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்தவகையில் IT பாடத்துறையை இனம்கண்டு மிகக்குறைந்த அதாவது மாதாந்தம் Rs.350.00 மாத்திரம் பெற்று இக்கற்கை நெறியினை அனுபவம் கூடிய ஆசிரியர்களைக்கொண்டு செய்து வருகின்றோம்’.

media

‘வெளியிடங்களில் கூடுதலான IT பாடத்தில் புள்ளிகளைப்பெறுபவர்கள் எமது நிறுவனத்தினைச் சேர்நதவர்கள். அத்துடன் பெற்றோர்களுக்கும் தனது பிள்ளை கனணித்துறையில் எவ்வாறான விடயங்களைக்கற்க வேண்டும் எதனை கற்க கூடாது என்று தெளிவுபடுத்த ஒரு பயிற்சி வகுப்பினை ஆரம்பித்தோம்.

ஆனால் அது வெற்றியளிக்கவில்லை’. எனத்தெரிவித்தார்

அஷ்ஷெய்ஹ் ஏ எல் எம் மும்தாஸ் மதனி தனதுரையில்,
‘சர்வதேச தரத்திற்கு ஒப்பாக அல்குர்ஆன் ஹிப்ழு போட்டியினை 13.09.2014 தொடக்கம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் 03.09.2014 முதல் இதற்கான விண்ணப்ப படிவங்களை எமது கல்லூரியில் பெற்றுக்கொள்ள முடியும் எனத்தெரிவித்தார்.

ஊடகத்துறையினை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் எமது நிறுவனம் செயற்பட்டுவருவதால் ஊடகத்துறையினை எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி பயிற்சிநெறிகள் அதனோடினைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும்’ ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment