Category: Your Kattankudy
-
ரெய்ஹானே ஜப்பாரிக்கு ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
தெஹ்ரான்: ஈரானில் தன்னைப் பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றதாகத் தெரிவிக்கப்படும் ஆண் ஒருவரைக் கொன்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்த பெண்ணொருவரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது என ஈரானுக்குள்ளிருந்தும் சர்வதேச அளவிலும் வலியுறுத்தப்பட்டிருந்தும்கூட 26 வயது ரெய்ஹானெ ஜப்பாரிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தனது இஸ்லாமிய ரசிகர்களுக்கு முஹர்ரம் வாழ்த்துக்களைத் தெரிவித்த மன்செஸ்டர் யுனைட்டட்!
– MJ லண்டன்: உலகின் புகழ்பெற்ற உதைப்பந்தாட்டக் கழகமாகத் திகழும் இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டட், தனது முகப்புத்தகத்தில் உலகெங்கிலுமிருந்தும் இணைந்திருக்கும் இஸ்லாமிய ரசிகர்களுக்கு ‘முஹர்ரம்’ புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்தமை தற்பொழுது உலகளவில் பிரபல்யமடைந்து வருகிறது.
-
வடக்கு முஸ்லிம்களுக்கு தேவை இன்று தமது முஸ்லிம் தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வதே
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமக்கான சரியானதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்திக் கொள்வதில் உறுதியான முயற்சியினை செய்யாமல் போனதே சரியான தீர்வொன்றினை அடைந்துக் கொள்ள முடியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருப்பதற்கான காரணமாகும் என்றால் அது மிகையாகாது. நடை பெற்ற முடிந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் எமது மக்கள் சரியான தெரிவை செய்வார்கள் என்று இருந்த போதும் கணிசமானவர்களே அந்த தெரிவினை செய்தார்கள்.
-
பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை: நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் விபரம்
– FM. பர்ஹான் காத்தான்குடி: பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையில் 2015ம் கல்வியாண்டுக்கான மாணவ மாணவிகளை இணைத்துக்கொள்வதற்காக இன்று 2014.10.22 இடம்பெற்ற எழுத்து மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் விபரம்
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது தொடர்பில் மட்டக்களப்பில் விஷேட கூட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வென்றெடுத்த சுதந்திரத்தை பாதுகாப்போம் – எமது உரிமைகளை காத்திடுவோம் எனும் தொனிப்பொருளில் 25-10-2014 இன்று சனிக்கிழமை விஷேட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் விஷேட கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது தொடர்பில் இடம்பெற்றது.
-
கட்டார் நாட்டில் காத்தான்குடி மாணவனின் சாதனை!
-டீன் பைரூஸ்- டோஹா கட்டார்; கட்டார நாட்டில் உள்ள ” STAFFORD INTERNATIONAL SCHOOL ” இல் தரம் 09 ல் கல்வி கற்று வரும் காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது ஜவ்சித் என்ற மாணவன் பாடசாலை மட்டத்தில் பல்வேறு பட்ட போட்டிகளில் கட்டார் மண்ணில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார். புதிய காத்தான்குடி பரீட் நகரைச் சேர்ந்த முஹம்மத ஜவ்பர் சில்மியா என்பவர்களது அன்பு மகனான இவர் தனது 14 வயதில் பல நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக…
-
‘அன்றும் இன்றும் நாளையும் மஹிந்தேவே ஜனாதிபதி’ – பிரதி தவிசாளர் ஏ.எம். நௌபர்
– எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாஞ்சோலை கிராம சேவையாளர் பிரிவிலுள்ள திவிநெகும பயனாளிகளுக்கு ஆறாம் கட்டமாக உதவிப்பொருற்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதி தவிசாளார் ஏம்.எம். நௌபர் இவ்வாறு உரை நிகழ்த்தினார்.
-
பள்ளிவாயல்கள் கதீப்மார்கள் இமாம்கள் சம்மேளனத்தின் முஹர்ரம் நிகழ்வு 2014
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி பள்ளிவாயல்கள், கதீப்மார்கள், இமாம்கள் சம்மேளனத்தின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு புதிய காத்தான்குடி அன்வர் மஸ்ஜித் இல் (கடலோரக்காற்றில்) மேற்படி நிகழ்வு இடம் பெற உள்ளதாக சம்மேளனத்தின் செயளாலர் மௌலவி அல்ஹாஜ் SMM முஸ்தபா (பலாஹி) JP தெரிவித்தார்.
-
புனித கஃபா சாவி காப்பாளர் காலமானார்
– முகமட் ஜலீஸ் M மக்கா: புனித கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் பணிக்குரிய நபரான ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் ஷெய்பி என்பவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். 74 வயதையுடைய அப்துல் காதிர் அஷ்ஷெய்பி, கஃபாவின் சாவி பாதுகாக்கும் பொறுப்பை வகித்துவந்தார்.
-
மகிந்தவின் ‘தேர்தல் பட்ஜெட்’
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள சூழ்நிலையில், மகிந்த ராஜபக்ஷ தனது 10-வது வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். பொருளாதார ரீதியில் நலிவான நிலையில் உள்ள மக்களை இலக்குவைத்து இந்த வரவுசெலவுத் திட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதிகளை அளித்துள்ளதாக பொருளாதார வல்லுநர் முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தா கூறுகின்றார்.
-
கொழும்பு கிளை”CODEFEST 2014″ தகவல் தொழிநுட்ப போட்டியில் கல்முனை ஸாஹிராவுக்கு 2ஆம் இடம்
கல்முனை: SLIIT இனால் நடாத்தப்பட்ட “CODEFEST 2014″ தகவல் தொழிநுட்ப போட்டிகளின் இறுதிச் சுற்றில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசலை அணி, நாடளாவிய ரீதியில் 2ஆம் இடத்தைப் பெற்று ரூபா 50,000/- பணப்பரிசையும் வென்றுள்ளது. 24.10.2014 காலை 8 மணிக்கு, மாலபேயில் அமைந்துள்ள SLIIT வளாகத்தில் இப்போட்டிகள் நடைபெற்றது.