வடக்கு முஸ்லிம்களுக்கு தேவை இன்று தமது முஸ்லிம் தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வதே

Your Kattankudy

– இர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார்: வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமக்கான சரியானதொரு தலைமைத்துவத்தை  ஏற்படுத்திக் கொள்வதில் உறுதியான முயற்சியினை செய்யாமல்  போனதே சரியான தீர்வொன்றினை அடைந்துக் கொள்ள முடியாமல்  அங்கலாய்த்துக் கொண்டிருப்பதற்கான காரணமாகும் என்றால் அது மிகையாகாது. நடை பெற்ற முடிந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் எமது மக்கள் சரியான தெரிவை செய்வார்கள் என்று இருந்த போதும் கணிசமானவர்களே அந்த தெரிவினை  செய்தார்கள்.

ஏனையவர்கள் வழமைப் போன்று எவ்வித அபிவிருத்தி பணிகளையும் மக்களுக்கு செய்யாது வெறும் உணர்வு வார்த்தைகளை கூறி மக்களது வாக்குகளை கொள்ளையடித்து மக்கள் அரசாங்கத்தினது எதிரிகள் என்பதை காண்பித்து தமது பதவிகளை தக்க வைத்துக் கொண்ட சரித்திரம் தான் அதிகமாக இடம் பெற்று வந்துள்ளது.

mannar (4)

குறிப்பாக வடக்கை பொறுத்த வரையில் தமிழர்களும் .முஸ்லிம்களும் வாழ்ந்துவரும் ஒரு பரம்பரை ஒற்றுமையினை கொண்ட பிரதேசமாகும்.நீண்டகால மொழி ரீதியான உறவினை கொண்டு தமிழுக்கு முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பினை செய்து வருகின்றதை வரலாறு பதிவாக கொண்டுள்ளது.அவ்வப்போது இடம் பெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளின் போதும் இரு சமூகங்களும் புரிந்துணர்வுடன் செயற்பட்டுவந்ததை வரலாற்று நெடுகிலும் நாம் கண்டு வந்துள்ளோம்.இவ்வாறு ஒன்றுபட்ட செயற்பாடுகளின் காரணமாக எத்தனையோ நன்மைகளை எமது இரு சமூகமும் அனுபவித்து வந்துள்ளது.

ஆனால் துரதிஷ்டம் கடந்த 30 வருடகாலமாக இழைக்கபட்ட தவறின் காரணமாக பல்வேறு விளைவுகளையும்.அழிவுகளையும் எமது மக்கள் சந்திக்க நேரிட்டது என்பது உண்மையாகும்.இந்த நிலையில் தமிழர்கள் தமிழர்களையும்.ஏனைய சமுகங்களையும் ஆழ வேண்டும் என்ற ஓரு வகையான மன நிலையினை அன்று பிரிவினைக்கு வித்திட்டவர்கள் ஏற்படுத்தினர்.இதன் கோரத்தனம் தான் கடந்த கால யுத்தமாகும்.

Your Kattankudy

இந்த யுத்தம் வெறும் உரிமைக்காக என்று சொல்லப்பட்ட போதும் ,அது இட ஆக்கிரமிப்புடன் போதுமான சுய ஆட்ச்சிக்கான அடித்தளமாக அமைந்தது.இந்த சந்தர்ப்பத்தில் ஆயுத குழுக்களுக்கு தேவையாக இருந்த துரும்பாக தமிழர் அரசியல் கட்சிகளின் நுழைவு காணப்பட்டது.

வடக்கில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை இருக்கக் கூடாது என்பதில் வடக்கின் ஆயுதக் குழுக்களும்.தமிழ் கட்சிகளும் இருக்கமான நகர்வினை முன்னெடுத்த போது மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரப் அவர்கள் கட்சியினை உருவாக்கினார்.அந்த கட்சியின் அன்றைய தியாகப் போராளிகளாக இருந்தவர்களில் முன்னாள் அமைச்சர் அபுபக்கர் மற்றும் டாக்டர் இல்யாஸ் ஆகியோரை மறந்துவிட  முடியாது.

இவர்களின் அரசியல் செயற்பாடுகள் எதிர்பார்த்த மக்கள் நன்மைகளை காணவில்லை.அதன் பின்னர் வந்த மர்ஹ-ம் நுார்தீன் மசுர் அவர்கள் பணியாற்றினார்.அப்போது அவர் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக இருந்தார்.அதன் பிற்பாடு அமைச்சர் றிசாத் அரசியலிலும்.அபிவிருத்தியிலும் புரட்சியினை செய்ய ஆரம்பித்தார்.

Your Kattankudy

இந்த வளர்ச்சியால் முஸ்லிம்களும்.தமிழ் மக்களும் அரசியல் விழிப்புணர்வை பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தால் அமைச்சர் றிசாதுக்கு எதிரான பிழையான கருத்துக்களை சிலர் விதைக்க ஆரம்பித்தனர்.இந்த சதியின் பின்னணயில் இருப்பவர்கள் யார் என்பதை பல முறை இனம் காட்டப்பட்டுள்ளனர்.

வடக்கில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதில் தமிழ் வாத அரசியல் கட்சிகள் கடும் வேகத்துடன் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இமாம் அவர்களுக்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதி நிதித்தை கொடுத்து முஸ்லிம்களுக்குள் ஊடுருவி வாக்கு வங்கிக்குள் சரிவை ஏற்படுத்த எடுத்த முயற்சி தோல்வி கண்டதை நாம் பார்க்கின்றோம்.அதன் பின்னர் நடை பெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் அஸ்மின் அய்யுப் அவர்களை காண்பித்து மீண்டும் இந்த படலத்தை நடத்தினர்.

இன்று வடக்கின் ஆட்சியினை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த கூட்டமைப்புக்கு முஸ்லிம் வாக்குகள் தேவையென்பதை கணக்கிட்டுக் கொண்டுள்ளது.இந்த நிலையில் முஸ்லிம்கள் சிக்கிவிடக் கூடாது என்பதில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.30 வருட இழப்புக்களுக்கு  மத்தியில் இன்னும் இழந்தவற்றை பெற்றுக் கொள்ள போராட்டங்களை நடத்திவரும் நிலையில் வடக்கில் இருக்கும் முஸ்லிம் தலைமைத்துவங்களை இல்லாமல் செய்யும் செயற்பாடுகள் மிகவும் வேகமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

mannar

இதனை கவனத்திற் கொண்டு வடக்கில் முஸ்லிம் தலைமைத்துவத்தை பாதுகாக்க கட்டுக் கோப்பான அரசியல் ஒற்றுமையினை நாம் ஏற்படுத்தியாக வேண்டும்.இந்த அரசியல் பலம் மீண்டும் ஆரம்ப முதல் உருவாக்க முடியாது என்பது யதார்த்தமாகும்.தற்போதுள்ள தலைமைத்துவத்தை நாம் தக்க வைக்க தேவையான பாதுகாப்பு வேலியினை இட வேண்டும்.

இன்றைய வடக்கு அரசியல் தளத்தில் பாராளுமன்ற பிரதி நிதித்துவம்.மாகாண சபை.பிரதேச சபைகளின் அதிகாரங்கள் மற்றும் உறுப்பினர்களை கொண்ட கட்சியாக அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டுமே இருக்கின்றது.

இந்த நிலையில் இன்று இந்த கட்சியினை  அரசியலில் இருந்து ஒரங்கட்டுவதற்கு  சில சக்திகள் தொடர்ந்தும் கங்கணம்கட்டி கொண்டுள்ளதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.இதற்கு தீனிபோட்டும் மருந்தேற்றியும் வளர்க்க எமது மக்கள் துணையாக இருந்துவிடக் கூடாது.

Published by

Leave a comment