‘அன்றும் இன்றும் நாளையும் மஹிந்தேவே ஜனாதிபதி’ – பிரதி தவிசாளர் ஏ.எம். நௌபர்

nowfer oddamavadi– எம்.ரீ.எம்.பாரிஸ் 

ஓட்டமாவடி: மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாஞ்சோலை கிராம சேவையாளர் பிரிவிலுள்ள திவிநெகும பயனாளிகளுக்கு ஆறாம் கட்டமாக உதவிப்பொருற்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதி தவிசாளார் ஏம்.எம். நௌபர் இவ்வாறு உரை நிகழ்த்தினார்.

இந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை யாராலும் திட்டம்மிட்டோ திட்டம் தீட்டியே அழிக்க முடியாது அன்றும் எமக்கு மஹிந்தேவே ஜனாதிபதி இன்றும் நாளையும் மஹிந்தேவே ஜனாதிபதி எமது மக்கள் என்றும் நன்றி உள்ளவர்கள் பயங்கிர வாதம் தலை தூக்கிய அக்காலத்தை இன்றும் எம்மவர்கள் எண்னி எண்னி அழுது புலம்பி பெறும் மூச்சு விடுகின்றனர்.

சந்தோஷத்தை இழந்து நிம்மதியற்றவர்களாக நாம் அலை மேதி திரித்தோம் வீரமிக்க தலைவன் மஹிந்த ராஜ பக்ஷ எமக்கு ஜனாதிபதியாக வந்தமை தீவிரவாதத்திற்கு சவால் விடுத்தது மூன்று தசாப்த கால தீவிரவாத போராட்டம் ஒரு நெடியில் அழித்து ஒழிக்கப்பட்டது.

nowfer oddamavadi
கோறளைப்பற்று மேற்கு பிரதி தவிசாளார் ஏம்.எம். நௌபர்

எமது மக்களின் ‘துஆ’ என்ற ஆயுதம் இன்று எமது நாட்டை வென்று விட்டது. உறுதியாக கூறுகின்றேன் இன்றும் மஹிந்தவே ஜனாதிபதி நாளையும் அவர்தான் எம் நாட்டிற்கு மன்னன் எமது மக்கள் நன்றி மறந்தவர்கள் அல்ல எமது கிராமத்தின் அரச அதிகாரி ஒருவரினால் இந்த நாட்டு அரசுக்கு எதிராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் அரசாங்கத்திற்கெதிராவும் அவர்களின் மஹிந்த சிந்தனை திட்டத்திற்கெதிராகவும் சதி திட்டங்களை தீட்டி நாம் தான் எல்லாம் என்ற இருமாப்புடன் செயற்பட்டு வரும் அரச அதிகாரி ஒருவர் நாட்டின் முதுகெழும்புகளான இளைஞர்களையும் மக்களையும் பிழையான வழிகாட்டலுக்குள் கொண்டு செல்ல முனைகின்றனர். இது ஒரு காலமும் நடக்காது.

இவ்வாறு வழிகாட்டுபவர்கள் இறுதியில் மாட்டு கொட்டைகளுக்குள் தான் குடியமர முடியும் நாங்கள் பொறுமையாக செல்கின்றோம் என்பதற்காக எம்மால் இந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்னி விட வேன்டாம் காலம் வெகு விரைவில் பதில் செல்லும். என தமது உரையின் போது தெரிவித்தார்.

Published by

Leave a comment