கட்டார் நாட்டில் காத்தான்குடி மாணவனின் சாதனை!

-டீன் பைரூஸ்-

1457646_1390794444494862_1586576188_nடோஹா கட்டார்; கட்டார நாட்டில் உள்ள ” STAFFORD INTERNATIONAL SCHOOL ” இல் தரம் 09 ல் கல்வி கற்று வரும் காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது ஜவ்சித் என்ற மாணவன் பாடசாலை மட்டத்தில் பல்வேறு பட்ட போட்டிகளில் கட்டார் மண்ணில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்.  புதிய காத்தான்குடி பரீட் நகரைச் சேர்ந்த முஹம்மத ஜவ்பர் சில்மியா என்பவர்களது அன்பு மகனான இவர் தனது 14 வயதில் பல நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக (நைஜீரியா,ஆப்ரிகா,இந்தியா,பிலிபைன்ஸ்,இலங்கை) போன்ற நாடுகளைச் சேர்ந்த  மாணவர்களுக்கு மத்தியில் இவர் தனது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்.

இவர் உயரம் பாய்தல்,குண்டெறிதல்,தடைதாண்டி ஓட்டம்,நீளம் பாய்தல், 800 M, 1200 M, மரதன் ஓட்டம் ஆகிய போட்டிகளில்  தனது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்.

இவர் கல்வி மட்டத்திலும் சிறந்த பெறு பேறுகளை பெற்று வருகின்றார்.

மேலும் இவரது திறமைகளை நன்குனர்ந்த QATTAR AL-SADD SPORTS CLUB தனது அணிக்காக விளையாடுமாறு ஒப்பந்த அடிப்படையில் இவரை இணைத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற 18 வயதுக்க கீழ்பட்டோருக்கான மெய்வள்ளஞர் போட்டியின் போது இவர் தனது 14 வயதில் கலந்து கொண்டு வெவள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.IMG_2656

இவர் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரர் MIM.பைசர் (eastern transport aut-ser) என்பவரின் மருமகனும், காத்தான்குடி தள வைத்திசாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அல்ஹாஜ் எம்.இஸ்மாயீல் என்பவரின் பேரனுமாவார்.

இவரது தாய் தந்தை குடும்பம் கட்டார் நாட்டில் வசித்து வருகின்றார்கள். முகம்மது ஜவ்சித் இன்  தந்தையை தொலை பேசி மூலம் நாம் தொடர்பு கொண்டு பேசிய போது  அரபு விளையாட்டு கழகங்களின் பல தலைமைகள் தன்னை தொடர்பு கொண்டு இவரைப் பற்றி பேசுவதாகவும் அதில் ஒரு கட்டம்தான் எனது மகன் முகம்மது ஜவ்சித் ஒப்பந்த அடிப்படையில்  QATTAR AL-SADD SPORTS CLUB  அணிக்காக விளையாடி வருவதாகவும் முகம்மது ஜவ்சித் இன் தந்தை தெரிவித்தார்.

இவர் சகல துறைகளிலும் வெற்றி அடைய YOURKATTANKUDY சார்பாக வாழ்த்துகின்றோம்.

10351146_1455261561381483_2480641121176467519_n

 1457646_1390794444494862_1586576188_n1609977_725510614149528_1438016276_n1896889_416157225195020_988025049_n1925351_725511250816131_18430765_n

Published by

Leave a comment