Category: Your Kattankudy
-
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 2013 – வருடாந்த பரிசளிப்பு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 2013 வருடாந்த பரிசளிப்பு விழா 11-11-2014 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் யூ.எல்.ஏ. முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் கலந்து கொண்டார்.
-
காத்தான்குடி அன்வர் வித்தியாலத்தில் சிறுவர்களுக்கான நூலகம் திறக்கும் நிகழ்வு
– டீன்பைறுாஸ் காத்தான்குடி: புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலத்தில் சிறுவர்களுக்கான நூலகம் செவ்வாய்க்கிழமை (11.11.2014) காலை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ஜனாப் எம்.ஏ.சி.எம். நியாஸ் BA (So-Sc) தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்விற்கு, பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம். இஸ்மாலெவ்வை SLEAS கலந்து கொண்டார்.
-
சமூகவலைத்தளங்களில் தங்களது கௌரவத்தை இழக்கும் பதின்மவயதுப் பெண்கள்!
– AL- 95 லண்டன்: சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பதின்வயது சிறுமிகள் அதாவது டீனேஜ் பெண்களின் சுயகௌரவம் குறைவது கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.இங்கிலாந்தில் பாடசாலை மாணவ, மாணவியரின் சுயகௌரவம் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் 30 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதில் 14 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகளில் தங்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
-
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐ.அலியார் நியமனம்
– ஹாசிப் யாஸீன் அம்பாறை: திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐ.அலியார் நியமிக்கப்பட்டுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் மாவட்ட உள்ளக கணக்காய்வாளராகவும், சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளராகவும் கடமையாற்றியவர்.
-
ஐ.எஸ். இயக்க அடுத்த தலைவர் யார்?
– AF- 90 பக்தாத்: உலகிலேயே பணக்கார போராட்ட அமைப்பான ஐ.எஸ். அமைப்பின் அடுத்த தலைவர் யாராக இருக்கலாம் என்ற பேச்சு தற்பொழுது எழுந்துள்ளது.. இந்த அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல் பக்தாதி கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொசுல் நகரில் அமெரிக்க-ஈராக் படைகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் சனிக்கிழமை அல் கைம் நகரில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் பக்தாதி படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
-
இஸ்ரேலில் தொடரும் பலஸ்தீனர்களின் கலவரங்கள்
டெல் அவிவ்: இஸ்ரேல் வாழ் பலஸ்தீனர்கள் திடீர் திடீரென தாக்குதல்களை நடத்துவதும் அவர்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை சுட்டுக் கொல்வதும் அந்நாட்டில் புரட்சி வெடிக்கும் நிலைமையை உருவாக்கி உள்ளது. இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் அல்லாத அரேபியர்கள் அல்லது பலஸ்தீனர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். வடக்குப் பகுதியில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
-
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: சங்கக்கார நீக்கம்!
கொழும்பு: இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டியில் ஆடுவதற்காக இந்தியா சென்றுள்ளது. இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் அந்த அணி மோசமாக தோற்று தொடரை இழந்தது.
-
யாஸிர் அரபாத்தின் 10ஆவது நினைவு நிகழ்வு ரத்து
காஸா: பலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யாஸிர் அரபாத்தின் 10ஆவது ஆண்டின் நினைவு தினத்தை முன்னிட்டு காசாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்த இந்த நினைவு நிகழ்வை யாஸிர் அரபாத்தின் பத்தா இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது.
-
மூன்றாவது தடவையும் போட்டியிட முடியுமா? உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பிவைப்பு
கொழும்பு: 18வது அரசியலமைப்பு திருத்தத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி அபேட்சகராக போட்டியிட முடியுமா? இரண்டாவது பதவிக் காலத்தில் நான்கு வருடத்தின் பின் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியுமா போன்ற விவகார ங்கள் தொடர்பில் நேற்று உச்ச நீதிமன்றம் தமது முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது.
-
இம்மாதம் 22 ஆம் திகதி காத்தான்குடியில் இஸ்லாமிய இலக்கியப் பெருவிழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் இஸ்லாமிய இலக்கிய பெருவிழா 2014 நவம்பர் 22 சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வெகு கோலாகலமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி 22 சனிக்கிழமை காலை 8 மணிக்கு காத்தான்குடி மெயின் வீதி ஈச்சை மரத்து இன்பச்சோலை வழியாக மாபெரும் ஊர்வலம் பாடசாலை மாணவர்களால் இடம்பெறும்.
-
மகிந்தவை எதிர்க்க உருவாகிறது பொது எதிரணி!
கொழும்பு: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான தீவிர முயற்சியில் எதிரணிகள் இறங்கியுள்ளன. ஆளுங்கூட்டணிக்குள்ளேயே தீவிர பெளத்த தேசியவாதக் கட்சியாகவுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் பிக்குகளும் பொது வேட்பாளரை தெரிவுசெய்வதற்கான எதிரணிக் கூட்டணியின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
-
மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக ஏ.ல். அபுல்ஹஸன் நியமனம்
– எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலகத்திற்குற்பட்ட மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக ஏ.எல்.அபுல்ஹஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.