இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: சங்கக்கார நீக்கம்!

sangaகொழும்பு: இந்திய அணியுடனான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டியில் ஆடுவதற்காக இந்தியா சென்றுள்ளது. இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் அந்த அணி மோசமாக தோற்று தொடரை இழந்தது.

இதைத் தொடர்ந்து கடைசி 2 போட்டிக்கான இலங்கை அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலகக்கிண்ணப் போட்டி நெருங்கும் நேரத்தில் தொடர் தோல்வியால் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னணி துடுப்பாட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பருமான சங்கக்காரா, தமிகா பிரசாத், சுரஜ் ரந்தீவ், உபுல் தரங்கா ஆகிய 4 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு பதிலாக திரிமானே, சண்டிமால், ஷமிந்தா எரங்கா, அஜந்தா மெண்டீஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்னர். ஆனால் சங்கக்காரா, பிரசாத் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக அணி மேலாளர் சொய்சா தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment