– டீன்பைறுாஸ்
காத்தான்குடி: புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலத்தில் சிறுவர்களுக்கான நூலகம் செவ்வாய்க்கிழமை (11.11.2014) காலை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் ஜனாப் எம்.ஏ.சி.எம். நியாஸ் BA (So-Sc) தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்விற்கு, பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம். இஸ்மாலெவ்வை SLEAS கலந்து கொண்டார்.
மேற்படி சிறுவர்களுக்கான நூலகம் ” KIDS’ LIBRARY “திறப்ப நிகழ்வினில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இப்றாகீம், ஜனாப் எம்.எல்.எம். அன்சார் BA/ISA, பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல். முனீர் அஹமட் JP, பாடசாலை ஆசிரியாிகள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை அதிபர் மற்றும் ஆசியரியர்கள், மாணவர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த சிறுவர் நூலகத்தினை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.இஸ்மாலெவ்வை SLEAS. அவர்கள் திறந்து வைத்ததுடன் மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் இந்த நூலகம் அமையப் பெற்றிருப்பதாக பிரதி கல்விப்பணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.
Published by









Leave a comment