லண்டன்: சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பதின்வயது சிறுமிகள் அதாவது டீனேஜ் பெண்களின் சுயகௌரவம் குறைவது கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.இங்கிலாந்தில் பாடசாலை மாணவ, மாணவியரின் சுயகௌரவம் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் 30 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதில் 14 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகளில் தங்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டில் 14 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகள் 41 சதவீதம் பேர் தங்களுக்கு அதிக சுயகௌரவம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வெறும் 33 சதவீதம் பேரே அதிக சுயகௌரவம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒன்லைனில் தொடர்புகள் அதிகரித்திருப்பது, சமூக வலைதள பயன்பாடு, பொருளாதார நிலைமை சரியில்லாதது ஆகியவை பல டீனேஜ் பெண்களின் சுயகௌரவத்தை குறைத்துள்ளது என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
14 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகளில் நான்கில் 3 பேர் ஒன்லைனில் சட் செய்துள்ளனர். அதில் 13 சதவீதம் பேர் மனதை பாதிக்கும், பயப்படும் வகையிலான தகவலை பெற்றுள்ளனர்.ஐந்தில் ஒரு சிறுமி தனக்கு யார் என்றே தெரியாத நபரிடம் சட் செய்துள்ளார். மாணவ, மாணவியரில் பலர் ஒன்லைனில் ஆபாசம் மற்றும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை பார்த்துள்ளனர். ஒன்லைன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாணவ, மாணவியர் கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்தில் மாத்திரமன்றி, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உள்ள இவ்வயதுப் பெண்கள் யார் யார் என்றே தெரியாத அன்னிய ஆண்களால் ஈர்க்கப்பட்டு, ஆபாசம், காதல் விடயங்களில் தங்களை ஆழமாக அர்ப்பணிக்கின்றனர். இதன் விளைவு, பின்னர், குறித்த ஆணுக்கு தனது நிர்வான புகைப்படங்களை அனுப்பி வைக்கின்றனர். இவன்தான் எனது கணவன் என ஏமாரும் இப்பருவ மங்கையர் பின்னர், சமூக வலைத்தளங்களிலேயே தனது அசிங்கங்களையும், காதல் கதைகளையும் பார்த்து, படிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றுகிறது.
இதன்காரணமாக, வற்புறுத்தி பாலியல் நடவடிக்கைப் பிரயோகம், பணப்பறிப்புகள், அடிமை சாசனம் மற்றும் மிரட்டல் போன்ற வண்முறைகளுக்கு ஆளாகி, இறுதியில் தற்கொலை செய்யும் நிலைக்கு இப்பருவ மங்கையரின் நிலை இன்றைய சமூகவலைத்தளங்களில் ஏற்படுகிறது.
இறுதியில் தனது கௌரவம் மாத்திரமல்லாமல், குடும்ப மற்றும் பாடசாலை கௌரவத்தையும் இழக்கும் நிலைக்கு இன்றைய சமூகவலைத்தளங்களில் பதின்மவயதினர் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகிறது.
Published by



Leave a comment