காஸா: பலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யாஸிர் அரபாத்தின் 10ஆவது ஆண்டின் நினைவு தினத்தை முன்னிட்டு காசாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்த இந்த நினைவு நிகழ்வை யாஸிர் அரபாத்தின் பத்தா இயக்கம் ஒழுங்கு செய்திருந்தது.
காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர், பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த முடியாது என்று கூறியதை அடுத்தே இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
காசாவில் வெள்ளியன்று நடந்த சிறிய வெடிச் சம்பவங்களில் பத்தா இயக்கத்தின் கட்டடங்களும் யாஸிர் அரபாத் நினைவு தின மேடையும் சேதமடைந்திருந்தன.2007ஆம் ஆண்டு முதல் காசாவில் அரபாத்தின் நினைவுதினம் அதிகாரபூர்வமாக அனுஷ்டிக்கப்படவில்லை. அந்த ஆண்டில், ஹமாஸ் இயக்கத்துடன் ஏற்பட்ட மோதலில் பத்தா ஆதரவாளர்கள் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by
![arafat_nica11656439_355545c[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/arafat_nica11656439_355545c1.jpg?w=150&h=99)
![arafat_grave_234_N2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/arafat_grave_234_n21.jpg?w=300&h=225)
Leave a comment