மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக ஏ.ல். அபுல்ஹஸன் நியமனம்

abul hassan meeravodai– எம்.ரீ.எம். பாரிஸ்

ஓட்டமாவடி: கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலகத்திற்குற்பட்ட மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக ஏ.எல்.அபுல்ஹஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையில் ஒரு வருட காலமாக நிலவி வந்த அதிபருக்கான வெற்றிடத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய அதிபராக மட்-ரிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் மூன்று வருடகாலமாக அதிபராக கடமையாற்றி வந்த ஏ.எல்.அபுல்ஹஸன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் 2014.10.28 இடம் மாற்றக் கடிதத்தின் பிரகாரம் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக தமது கடமைபொறுப்பினை ஓட்டமாவடி கோட்ட கல்வி பணிப்பாளர் மீராசாய்வு அவர்கள் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 2014.11.07ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

abul hassan meeravodai
அதிபர் ஏ.எல். அபுல் ஹஸன்

குறிந்த பாடசாலையில் ஒருவருடகாலமாக நிலவி வந்த அதிபருக்கான வெற்றிடத்தை மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்தில் கொண்டு பிரதி அதிபர் ஏ.எம்.அன்வர் தற்காலியமாக அதிபர் கடமைபொறுப்பினை ஏற்று பல சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலையினை நடாத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_1362

Published by

Leave a comment