Category: Your Kattankudy
-
‘100 நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பேன்
கொழும்பு: தான் பதவியேற்று நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன
கொழும்பு: ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராக ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
-
எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதாக அச்சுறுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயர் பதவிகள்!!
கொழும்பு: ஆளும் கட்சியில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதுவரையில் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
-
சாய்ந்தமருது நெசனல அறிவகம் திறந்து வைக்கும் நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: மஹிந்த சிந்தனையின் கீழ் கிராமத்திற்கு தொழில்நுட்பம் எனும் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் கிராம மட்டத்தில் 69 நெனசல அறிவகக் கணனிக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் சாய்ந்தமருது நெசனல அறிவகம் திறந்து வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பொது நூலக வீதியில் நேற்று (20) இடம்பெற்றது.
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த முகம்மட் ஆரிபீன் அவர்கள் இன்று காலமானார்கள். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. ஒரு பிள்ளையின் தந்தையான அன்னார், காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயலில் கடந்த 15 வருடங்களாக முஅத்தினாகக் கடைமையாற்றிவர்.
-
ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் வெள்ளிக்கிழமை மாலை
அபூஹக் கொழும்பு: ஸ்ரீ ஜயவர்தனபுர பிட்டகோட்டை சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெறவுள்ள ஊடகவியலாகளுடனான சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மஹிந்தவின் மனசார்வதற்கு பட்டாசு ஒலிகளால் அதிர்ந்த காத்தான்குடி!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று 20 வியாழக்கிழமை கையொப்பமிட்டதையெடுத்து மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பட்டாசு கொளுத்தப்பட்டது.
-
ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல்
– பழுளுல்லாஹ் பஹ்ஜான் -அப்பாஸி காத்தான்குடி: காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) (வயது 55) நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடியில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
-
ஜனாஸா: காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) வபாத்
பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) காத்தான்குடி: காத்தான்குடி 1ம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) (வயது 55) புதன்கிழமை காத்தான்குடியில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
-
கல்முனை அலியார் வீதிக்கு காபெட் இடும் வேலை அங்குரார்ப்பண நிகழ்வு
ஹாசீப் யாஸீன் கல்முனை: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் வீதி அபிவிருத்தி அமைச்சின் 6 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை அலியார் வீதிக்கு காபெட் இடும் வேலையினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் (19/11/2014) இடம்பெற்றது.
-
கட்டாரில் ‘இரத்த உறவு முறையும் குடும்பவியல் ஒற்றுமையும்’ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 20-11-2014 வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
NFGG இன் ஏற்பாட்டில் உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல்
NFGG ஊடகப்பிரிவு / பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் 19ஆவது அரசியல் சீர்திருத்த முன் மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (18.11.2014) கொழும்பில் நடை பெற்றது.