‘100 நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பேன்

maithripala_sirisena_640x360_bbcகொழும்பு: தான் பதவியேற்று நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இதற்கான மக்கள் ஆணை ஏற்கனவே தனது கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதே விடயம் கடந்த கால ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 18 வதுதிருத்தம் நீக்கப்படுவதுடன் 17 வது திருத்தம் மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தான் மீண்டும் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அதே செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அறிவித்துள்ளார்.

தனது கட்சி உடைந்து துண்டு துண்டாவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது இருப்பதனாலேயே தான் மீண்டும் அரசியலில் நுழையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

maithripala_sirisena_640x360_bbc

BBC Tamil

Published by

Leave a comment