சாய்ந்தமருது நெசனல அறிவகம் திறந்து வைக்கும் நிகழ்வு

sainthamaruthu (2)– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: மஹிந்த சிந்தனையின் கீழ் கிராமத்திற்கு தொழில்நுட்பம் எனும் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதியின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் கிராம மட்டத்தில் 69 நெனசல அறிவகக் கணனிக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் சாய்ந்தமருது நெசனல அறிவகம் திறந்து வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பொது நூலக வீதியில் நேற்று (20) இடம்பெற்றது.

நெசனல அறிவகத்தின் சாய்ந்தமருது இணைப்பாளர் ஏ.ஆர்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வொண்டர் எக்ஸன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஜே.எம்.ஜெஸீல், கல்முனைத் தொகுதி ‘லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரின் ஆலோசகரும், ஆசிரியருமான யூ.எல்.எம்.ஹிலால், சாய்ந்தமருது பிரதேச செயலக நிதி உதவியாளர் ஏ.சீ.முஹம்மட், சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.சமூன், சாய்ந்தமருது திவிநெகும சமுதாய வங்கியின் உதவி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளனங்களின் பிரதித் தலைவர் எம்.ஏ.சபான் உள்ளிட்ட உலமாக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கணனிக் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், கணனி ஹாட்வெயார் பொருட்களும் அதிதிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

sainthamaruthu (2)

sainthamaruthu

Published by

Leave a comment