Category: Your Kattankudy
-
லொரியில் இருந்து சிதறிய பணம் – அள்ளிச் சென்ற மக்கள்
ஹொங்கொங்: ஹொங்கொங்கில் சுமார் 68 மில்லயன் டொலர்கள் மதிப்பிலான பணத்தை ஏற்றிச் சென்ற லொரி ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து, சாலையில் விழுந்து சிதறிய பண நோட்டுக்களை எடுத்துச் சென்றவர்கள் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர்.பணத்தை ஏற்றி வந்த லொரி சாலை விபத்தில் சிக்கியதையடுத்து சுமார் முப்பத்தியைந்து மில்லியன் ஹொங்கொங் டொலர்கள் பெறுமதியான பண நோட்டுகள் சாலையில் சிதறி விழுந்தன.
-
ஏறாவூர் லெக்சிகன் கல்லூரியின் விருது வழங்கும் வைபவம்
ஏறாவூர்: ஏறாவூர் லெக்சிகன் ஆங்கிலக் கல்லூரி மாணவர்களின் விருது வழங்கும் வைபவம் 25.12.2014 இன்று ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் கல்லூரியின் பணிப்பாளர். திருமதி.றமீஸா முபாறக் தலைமையில் நிகழ்ந்தது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் கலந்து கொண்டார்.
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காத்தான்குடி உலமாக்களுடன் NFGG விஷேட சந்திப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள உலமாக்கள் மற்றும் கதீப்மார்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட சந்திப்பு ஒன்று நேற்று இரவு இடம்பெற்றது.
-
ஹிஸ்புல்லாஹ் நகர் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 217 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: பொருளாதர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன .
-
தியாயவெட்டுவான் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 135 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் வாழைச்சேனை: பொருளாதர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
-
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் – திவிநெகும பயனாளிகள் 630 பேருக்கு வீடு திருத்துவதற்கான முதற்கட்ட மானிய உதவி 2500 ரூபாய் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி:‘செழிப்பான இல்லம்’ எனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவி வழங்கும் பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கையில் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
-
கிராமங்களிலும் சரிய ஆரம்பித்துள்ள மஹிந்தவுக்கான ஆதரவு
கொழும்பு: எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போது கிராமிய மட்டத்தில் ஆதரவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும்கட்சியின் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அதிகளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று அனுராதபுரத்தில், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் 16 பேர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
-
மைத்திரிபாலவின் சந்திவெளி அலுவலகம் எரிப்பு
சந்திவெளி: ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் அமைக்கப்பட்டிருந்த எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் வந்த சில ஆயுதம் தரித்த கும்பலொன்று இந்த அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு வீசி, அடித்து உடைத்து எரித்ததாக அலுவலகத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
-
ரிசாத் பதியுதீனின் கிழக்கிற்கான பயணம் இன்று ஆரம்பமாகின்றது: முதலாவதாக காத்தான்குடிக்கு விஜயம்
– ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின் கிழக்கிற்கான பயணம் இன்று ஆரம்பமாகின்றது.
-
சிரிய உள்நாட்டு யுத்தத்தால் 290 பாரம்பரிய தளங்கள் சேதம்
டமஸ்கஸ்: சிரியாவில் நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தால் அங்குள்ள நூற்றுக்கணக்கான புராதன தளங்கள் அழிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டு மற்றும் களவாடப்பட்டு இருப்பதன் அபாய நிலை புதிதாக பெறப் பட்டிருக்கும் செய்மதி படங்கள் மூலம் உறுதியாகி இருப்பதாக ஐ.நா. மன்றம் குறிப்பிட்டுள்ளது.
-
“ரிசாட்டின் நடவடிக்கையால் சகல முஸ்லிம்களுக்கும் அவமானம்” : காதர்
கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீனின் நடவடிக்கையால் இந்நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் சகல முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அமோக வெற்றியில் பங்காளர்களாக வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
-
திலகரட்ன தில்சான் மஹிந்தவுக்கு ஆதரவு!
– AF-70 கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டவீரர் வீரர் திலகரட்ன தில்சான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதிக்கான பிரசார காரியாலயம் இதனை அறிவித்துள்ளது. நேற்று தில்சான், மஹிந்த ராஜபக்சவை சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டதாக அந்தக் காரியாலயம் தெரிவித்துள்ளது.