ஏறாவூர்: பொருளாதர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன .
இதற்கமைவாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் நகர் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 217 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு 24-12-2014 நேற்று புதன்கிழமை ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் அப்றார் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இதன் போது 217 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதே வேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் அஷ்ரப் வித்தியாலயத்திலுள்ள தற்காலி முகாமிலுள்ள பொது மக்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டார்.
இங்கு வழங்கி வைக்கப்பட்ட ஒரு உலர் உணவுப்பொதி 2000 ரூபாய் பெறுமதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment