வாழைச்சேனை: பொருளாதர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாயவெட்டுவான் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 135 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு 24-12-2014 நேற்று புதன்கிழமை தியாயவெட்டுவான் ஹூஸைனியா ஜூம்மா பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் 135 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு வழங்கி வைக்கப்பட்ட ஒரு உலர் உணவுப்பொதி 2000 ரூபாய் பெறுமதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment