ஏறாவூர் லெக்சிகன் கல்லூரியின் விருது வழங்கும் வைபவம்

???????????????????????????????ஏறாவூர்: ஏறாவூர் லெக்சிகன் ஆங்கிலக் கல்லூரி மாணவர்களின் விருது வழங்கும் வைபவம் 25.12.2014 இன்று ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் கல்லூரியின் பணிப்பாளர். திருமதி.றமீஸா முபாறக்  தலைமையில் நிகழ்ந்தது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது அப்துல் அஸீஸ்  கருத்துத் தெரிவிக்கும் போது,

இன்று ஆங்கிலக் கல்வி இல்லையென்றால் எதிர்காலமே இல்லை என்ற அளவிற்கு அதன் முக்கியத்துவம் இருக்கின்றது. நாம் அன்றாடம் உபயோகிக்கின்ற சொற்களில் பெரும்பாலும் ஆங்கிலமே செல்வாக்குச் செலுத்துகிறது. இதனை ஒழுங்குபடுத்தி பேசுவதற்காகவே இவ்வாறான கல்வி நிலையங்கள் கைகொடுக்கிறது.

மாணவர்கள் எப்போதும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மாணவர்களை விட அதிகம் கற்ற காரணத்தினால்தான் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதை பெறறோர்கள் தெரியப்படுத்த வேண்டும். இன்று எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர்களினால் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

azees

அவர்கள் பிள்ளைகளின் கருத்துக்களை உள்வாங்காமலும், அவ்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலும் தமது வீட்டுச் சூழலை மாற்றியமைத்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் தத்துவத்தின்படி, ஒருவர் எந்த விடயத்தில் தூக்கத்தையும், நேரத்தையும் செலவளிக்கிறாரோ அதுவே அவரது இலக்காகவும், முடிவாகவும் இருக்கும் என்றார். நாம் ஆங்கிலத்தை கற்பதில் அதிகம் ஆர்வம் காட்டும் போது அது எமக்கு பயன்பெற்று எதிர்காலத்தை முன்னேற்றும் எனக் கூறினார்.

eravur kids

இவ்விழாவின் போது பாடநெறியினைப் பூர்த்தி செய்து கூடிய புள்ளிகளைப் பெற்ற ஆறு மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 21 மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களையும் பெற்றனர்.

Published by

Leave a comment