ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காத்தான்குடி உலமாக்களுடன் NFGG விஷேட சந்திப்பு

rahuman– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

காத்தான்குடி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள உலமாக்கள் மற்றும் கதீப்மார்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட சந்திப்பு ஒன்று நேற்று இரவு இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பு காத்தான்குடி கடற்கரையில் அமைந்துள்ள கடாபி வலீமா மண்டபத்தில் தலைமைத்துவசபை உறுப்பினர் ALM .சபீல் தலைமையில் இடம்பெற்றது.

rahuman

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதற்கான தேவைகள் என்ன என்பது தொடர்பிலும் முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் அவர்கள் விரிவான விளக்கம் ஒன்றினை இங்கு வழங்கினார்.

???????????????????????????????

அத்துடன் இதன்போது எழுப்பப்பட்ட சந்தேகங்கள் தொடர்பிலும் தெளிவுகளையும் அவர் முன்வைத்தார்.

இதன்போது உலமாக்கள் மற்றும் கதீப்மார்கள் உள்ளிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவசபை உறுப்பினர்களும்இ செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Published by

One response to “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காத்தான்குடி உலமாக்களுடன் NFGG விஷேட சந்திப்பு”

  1. Hizbullahs copy. Next auto next government officers………..

Leave a comment