ஓட்டமாவடி:‘செழிப்பான இல்லம்’ எனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவி வழங்கும் பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கையில் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபாய் வீதம் சுமார் 4162 வாழ்வின் எழுச்சி திவிநெகும பயனாளிகளுக்கும் வீட்டு மானிய உதவி வழங்கும் திட்டத்தில் சுமார் 630 பேருக்கு வீட்டு மானிய உதவி வழங்கும் நிகழ்வு 24-12-2014 நேற்று புதன்கிழமை ஓட்டமாவடி காவத்தமுனை அல் மினா பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு மேற்படி 630 பேருக்கு வீட்டு மானிய உதவித் தொகை 2500 ரூபாவை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் மீரான் ,ஒட்டமாவடி பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி திவிநெகும வங்கி முகாமையாளர் மஜீட் உட்பட திவிநெகும உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Published by



Leave a comment