கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டவீரர் வீரர் திலகரட்ன தில்சான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதிக்கான பிரசார காரியாலயம் இதனை அறிவித்துள்ளது. நேற்று தில்சான், மஹிந்த ராஜபக்சவை சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டதாக அந்தக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தில்சான், மஹிந்த ராஜபக்சவுக்காக தொலைக்காட்சி பிரசாரங்களிலும் தோன்றி வருகிறார்.
மஹிந்தவின் இக்கட்டான் தருணங்களைத் தவிர்க்க, இந்தி நடிகர்கள், உள்ளுர் நடிக, நடிகைகள், மற்றும் விளையாட்டு வீரர்களையும் பலகோடி ‘டீல்’ பேசி தனக்கு ஆதரவை வழங்கும்படி மஹிந்த கேட்டு வருகிறார். இவ்வாறான ஒரு டீலை இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் குமார் சங்கக்கார மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment