Category: Your Kattankudy
-
மைத்திரி-மஹிந்த சந்திப்பு: பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவில்லை!
கொழும்பு: அடுத்துவரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக மிஹ்லார் நியமனம்
– இர்ஷாத் ரஹ்மதுல்லா கொழும்பு: கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அசனார் முஹம்மத் மிஹ்லார் நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களினால் இன்று இந்த நியமனம் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது.
-
334 உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படவுள்ளன
கொழும்பு: நாட்டில் காணப்படுகின்ற 334 உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட வுள்ளதாகத் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சிமன்றங்களை கலைத்து முதலில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
கடலுக்குள் தடம்புரண்டது இ.போ.ச. பஸ் : 6 பேர் காயம்
காலி: காலி – ஹபராதுவ பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று கடலுக்குள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-
இந்தோனேசியாவில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் நெருக்கமாக அமர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்லத் தடை
எம்.ஐ.அப்துல் நஸார் அஷேயி: பாவச் செயல்களுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக திருமணமாகாத ஆண்களும் பெண்களும் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு இந்தோனேசியாவின் அஷேயிலுள்ள மாவட்டமொன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமையன்று சட்டமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
-
பாடசாலைகளுக்கு முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பாடசாலைகளுக்கு முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (05) சாய்ந்தமருது பிரதேச செயலக காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
போக்கோ ஹாரம் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களில் 214 பேர் கர்ப்பம்
– AF-80 லாகோஸ்: போக்கோ ஹாரம் தீவிரவாத அமைப்பு பிடித்துச் சென்று அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களில் 214 பேர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை செக்ஸ் அடிமைகள் போல தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 700 பெண்களை தீவிரவாதிகளிடமிருந்து ராணுவம் மீட்டது. அவர்களில் பலரையும் பாழ்படுத்தி சிதைத்துள்ளனர் இந்த தீவிரவாதிகள்.
-
அல்-கிம்மா நிறுவனத்தின் மரதன் ஓட்டப்போட்டி
– எம்.ரீ.எம். பாரிஸ் கல்குடா: மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் (06) புதன்கிழமை ‘ஆரோக்கியமிக்க இளைஞர்களை உருவாக்குவதன் மூலம் வளமான தேசத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளுக்கமைவாக கல்குடா பிரதேச இளைஞர்களது விளையாட்டு, மற்றும் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் நோக்கில் ‘மரதன்’ ஓட்டப்போட்டி நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாறூன்(ஸஹ்வி) தலைமையில் இடம் பெற்றது.
-
“பாகிஸ்தானில் கிரிக்கட் போட்டிகளை நடத்துவது ஆபத்து”
லாஹூர்: “பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழுமையான திருப்தி இல்லை” என சர் வதேச கிரிக்கட் வீரர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் அந்தஸ்து வாய்ந்த அணிகளில் ஒன்றான சிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு ஒப்புக் கொண்டதன் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மனித உயிரின் பெறுமதியை அறியாத மின்சாரசபை
கொழும்பு: “we are not an electrically safe country” ‘மின்சாரத்தில் நாம் பாதுகாப்பான நாடல்ல’ பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர்களில் ஒரு வரான நிலாந்த இப்படிக் கூறுகிறார்.நம் நாட்டில் தினமும் நடக்கின்ற சம்பவங்கள் இந்தக் கூற்றுக்கு அங்கீகாரம் வழங்குவது போல் இருக்கின்றன. மின்சாரம் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
-
பொதுபலசேனாவுக்கு புதிய அரசியல் கட்சி: தேர்தல் ஆணையருடன் இன்று சந்திப்பு!
கொழும்பு: புதிய அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்வது தொடர்பில் பொது பலசேனா அமைப்பிற்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இச்சந்திப்பை நடத்த பொதுபலசேனா அமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.