லாகோஸ்: போக்கோ ஹாரம் தீவிரவாத அமைப்பு பிடித்துச் சென்று அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களில் 214 பேர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை செக்ஸ் அடிமைகள் போல தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 700 பெண்களை தீவிரவாதிகளிடமிருந்து ராணுவம் மீட்டது. அவர்களில் பலரையும் பாழ்படுத்தி சிதைத்துள்ளனர் இந்த தீவிரவாதிகள்.
மீட்கப்பட்ட அனைவருக்கும் மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்குத் தேவையான அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல பெண்கள் மற்றும் சிறுமிகள் தீவிரவாதிகளிடம் மிகக் கொடுமையான சித்திரவதையை அனுபவித்துள்ளனர். அவர்களுக்குத்தான் நீண்ட கால மன நல ஆலோசனை தேவைப்படுகிறது.
இதுகுறித்து ஐ நா. உணவுத் திட்ட நைஜீரிய செயல் இயக்குநர் பாபாடுன்டே ஓஷோடிமெஹின் லாகோஸில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டார்.
Published by



Leave a comment