“பாகிஸ்தானில் கிரிக்கட் போட்டிகளை நடத்துவது ஆபத்து”

fica-cricketலாஹூர்: “பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழுமையான திருப்தி இல்லை” என சர் வதேச கிரிக்கட் வீரர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் அந்தஸ்து வாய்ந்த அணிகளில் ஒன்றான சிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு ஒப்புக் கொண்டதன் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவது குறித்த சிம்பாப்வேயின் தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை வீரர்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆறு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தொடரை கைவிட்டு இலங்கை வீரர்கள் பாதுகாப்பாக நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.

fica-cricket

இதன்பின்னர் எந்தவொரு சர்வதேச அணியும் பாகிஸ்தானில் கிரிக்கட் போட்டிகளை நடத்துவதற்கு முன்வரவில்லை. இந்நிலையில் அண்மையில் சிம்பாப்வே அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது போட்டி மற்றும் 3 ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தது.

இதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது போட்டி எதிர் வரும் 22 ஆம் திகதி மற்றும் 24 ஆம் திகதியும் 26, 29 மற்றும் 31 ஆம் திகதி ஒருநாள் போட்டிகளும் நடத்துவதற்கு தீர்மா னிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பினை கட்டுப்படுத்த முடியாது எனவும் சிம்பாப்வே கிரிக்கட் சபையின் தீர்மானம் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச கிரிக்கட் வீரர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment