அல்-கிம்மா நிறுவனத்தின் மரதன் ஓட்டப்போட்டி

marathon– எம்.ரீ.எம். பாரிஸ்

கல்குடா: மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில்  (06) புதன்கிழமை ‘ஆரோக்கியமிக்க இளைஞர்களை உருவாக்குவதன் மூலம் வளமான தேசத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளுக்கமைவாக கல்குடா பிரதேச இளைஞர்களது விளையாட்டு, மற்றும் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் நோக்கில் ‘மரதன்’ ஓட்டப்போட்டி நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாறூன்(ஸஹ்வி) தலைமையில் இடம் பெற்றது.

சிங்கள,தமிழ்,முஸ்லிம்,இன வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயம் பேணும் பல் வேறு சமூக நல்லிணக்க செயற்பாபாடுகளை மேற்கொண்டு வரும் அல்-கிம்மா நிறுவனம் பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள், இளைஞர்கழகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து விளையாட்டு துறையின்பால் ஈடுபடுத்துவதன் மூலம் ஆரோக்கியமிக்க நாட்டை கட்டியொழுப்பும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக நிறுவனத்தின் பணிப்பாளர் ஆரம்ப நிகழ்வின் போது கருத்து தெரிவித்தார்.

marathon

இப் போட்டிக்கு விண்னப்பத்தின்னூடாக தெரிவு செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 1ஆம் இடத்தினை யூத் ஸ்டார் விளையாட்டுக்கழக வீரரான எம்.எல்.அஸ்பாக்;; ,2ஆம் இடத்தினை ஹீரோ லயன்ஸ் வி.க வீரரான எம்.கே.எம். றிகாஸ் அவர்களும் 3ஆம் இடத்தினை ஸ்டார் வி.க.வீரரான எம்.ஐ.எம். றிபான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

marathon (2)

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

IMG_1408

முதல் பரிசுத்தொகை 20ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசுத்தொகை 15ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசுத்தொகை 10ஆயிரம் ரூபாயும், தலா மூன்று வீரர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் ஐயாயிரம் வீதம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள் ஐ.எல்.எம்.றிஸ்வி)

Published by

Leave a comment