Category: Your Kattankudy
-
மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்காவிட்டால் மாற்று வழி
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்காவிட்டால் மாற்று வழியொன்றில் செல்ல நேரிடும் என ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். மக்கள் கேட்கும் நபருடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைப்பதா? அல்லது ஐ.தே.கவுக்கு ஆட்சியை தாரைவார்ப்பதா என முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
-
ராஜபக்ஸ குடும்பம் யுத்தத்தை விற்றுப் பிழைத்துள்ளது
கொழும்பு: ராஜபக்ஷ குடும்பத்தினர் யுத்தத்தை விற்று பிழைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் 2014 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் தோல்வியை பிரதி பலிப்பதாகவே உள்ளது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
-
தகுதிச் சான்றிதழின்றி எவரும் தேர்தலில் போட்டியிட முடியாது
கொழும்பு: தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தகுதிச் சான்றிதழ் இன்றி எந்தவொரு நபரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென அதன் தலைவர் டொக்டர் சமீர நிலங்க சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
-
மைத்ரிபாலவுடன் கூட்டமைப்பினர் பேசியது என்ன?
கொழும்பு: நாட்டில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் நேற்று மீண்டும் தொடங்கியுள்ளதாக சம்பந்தர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்து பேசியுள்ளது.
-
சிகரம் ஜூம்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு
– எம்.எச்.எம். அன்வர் சிகரம்: ஆரையம்பதி, சிகரம் ஜூம்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வும் விஷேட பயான் நிகழ்வும் இடம்பெற்றது. ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில். மௌலவி ஏ எல் ஷாஜஹான் (பலாஹி) அவர்களால் பயான் நிகழ்த்தப்பட்டதுடன் இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.
-
400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் திறப்பு விழா நாளை
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்ட ஏறாவூர் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் அதன் பாரம்பரிய
-
தேர்தல் திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் NFGGயின் விஷேட செய்தியாளர் சந்திப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நாட்டில் தற்பொழுது பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கும் 20வது அரசியல் சாசனத் திருத்தம் எனப்படும் தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை NFGG இன்று (24.06.2015) கொழும்பில் நடாத்தியது.
-
நூடில்ஸ் விவகாரம்: பத்திரிகையாளர் மாநாடு
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: இலங்கையில் உள்ள நூடில்ஸ் உணவில் கலவையொன்று சேர்க்கப்பட்டுள்ளது தொடர்பில் வெளியான செய்தியனையடுத்து இத தொடர்பில் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தியாவில் மெகீ நுாடில்ஸ் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,அதனை இலங்கைக்குள் கொண்டுவருவதாக
-
பணயக்கைதிகளை உயிரோடு நீரில் அமிழ்த்தி கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!
– AF-90 பக்தாத்: உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட 16 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், உயிரோடு நீரில் மூழ்கடித்தும், கழுத்தில் வெடிகுண்டுகளை கட்டி வெடிக்கச் செய்தும் கொடூரமாக கொன்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர். தனி இஸ்லாமிய நாடு கோரி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், தங்களிடம் சிக்கும் பணயக் கைதிகளை தலைகளை வெட்டியும்,
-
நோன்பு வைத்த மாணவர்களை கட்டாயப்படுத்தி கசாயம் குடிக்க வைத்த திருச்சி பாடசாலை!
– SHM திருச்சி: திருச்சியில் உள்ள கிறிஸ்தவ பாடசாலை ஒன்றில் நோன்பு வைத்திருந்த முஸ்லீம் மாணவர்களை கட்டாயப்படுத்தி நிலவேம்பு கசாயம் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.திருச்சியில் உள்ள புனித ரெடீமீர் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் முஸ்லீம் மாணவ, மாணவியர் புனித ரமலான் நோன்பு இருந்து வருகிறார்கள்.
-
கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கையில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிப்பு!!
கொழும்பு: கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கையில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக கடந்த ஆண்டு 22 பாடசாலை மாணவர்களும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதக் காலப் பகுதியில் மேலும் 23 மாணவர்களும் எச்.ஐ.வீ நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக எயிட்ஸ் சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.