பக்தாத்: உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட 16 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், உயிரோடு நீரில் மூழ்கடித்தும், கழுத்தில் வெடிகுண்டுகளை கட்டி வெடிக்கச் செய்தும் கொடூரமாக கொன்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர். தனி இஸ்லாமிய நாடு கோரி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், தங்களிடம் சிக்கும் பணயக் கைதிகளை தலைகளை வெட்டியும்,
துப்பக்கியால் சுட்டும், கூண்டில் வைத்து உயிரோடு தீ வைத்து எரித்தும் கொன்று வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக்கின் நினேவே மாகாணத்தில் 16 பணயக் கைதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாக கொன்ற வீடியோ காட்சிகள், தற்போது வெளியாகி உலகையே மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அந்த வீடியோவின், முதல் காட்சியில் 4 பேரை அழைத்துச் செல்லும் தீவிரவாதிகள் அவர்களை ஒரு காரில் வைத்து பூட்டுகின்றனர். பின்னர் அந்த காருக்கடியில் ரொக்கெட் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்து பணயக் கைதிகளை கொல்கின்றனர்.
2 வது காட்சியில், 5 பணயக் கைதிகளை இரும்புக் கூண்டுக்குள் வைத்து பூட்டி, அதனை கிரேன் மூலம் தூக்கி, அழுக்கான நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கடித்து கொல்கின்றனர். பணயக் கைதிகள் மூச்சுத் திணறி உயிரிழக்கும் காட்சிகளை 2 கமராக்கள் படம் பிடிக்கின்றன.கொடூரத்தின் உச்சமாக, மண்டியிட்ட 7 பேரின் கழுத்தில் வெடி குண்டுகள் கட்டப்படுகின்றன. பின்னர் அந்த வெடி குண்டுகள் வெடிக்க வைக்கப்படுகின்றன. இதில் சிலரது தலைகள் துண்டாகி பல அடி தூரத்திற்கு சென்று விழுகின்றன.
புனிதமான ரமழான் கருணை உலகமெங்கும் வீசிக்கொண்டிருக்கும் இம்மாதத்திலும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூரங்கள் நின்றபாடில்லை. நிச்சயமாக யூத நிறுவனங்களாலேயே இந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயக்கப்படுவதாக உலக முஸ்லிம்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Published by




Leave a comment