Category: Your Kattankudy
-
“சிறுபான்மை சமூகத்தின் மத உரிமைகள் மறுதலிக்கப்பட்டதனால் தான் இலங்கையில் ஆட்சி மாற்றங்களை அந்த சமூகத்தினர் ஏற்படுத்த முனைந்தனர்”
– இர்ஷாட் ரஹ்மதுல்லா புத்தளம்: சிறுபான்மை சமூகத்தின் மத உரிமைகள் மறுதலிக்கப்பட்டதனால் தான் இலங்கையில் ஆட்சி மாற்றங்களை அந்த சமூகத்தினர் ஏற்படுத்த முனைந்தனர் என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு தமது வாழ்வை அலங்கரிக்கும் எந்தெவொரு அரசியல்வாதிகளும் இறைவனிடத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
-
திரைமறைவில் இடம்பெற்ற மைத்திரி-மகிந்த சந்திப்பு அம்பலமாகிறது
கொழும்பு: ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என ஊடக அறிக்கை வெளியாகிய போதிலும், இருவருக்கும் இடையில் உண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பு தொடர்பில் நேற்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்திலும் கருத்த வெளியிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
“ராஜிதவின் கருத்து என்னையும் மதத்தையும் அவமதிக்கும் செயல்”: ஹக்கீம்
கொழும்பு: ஜனாதிபதி கதிரைக்கு ஆசைப்பட்டு நான் மதத்தைதக்கூட மாற்றிக் கொள்வேன் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய கருத்து என்னையும், நான் பின்பற்றும் மதத்தையும் மக்களையும் அவமதிக்கும் செயல் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்…!
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் ஆகஸ்ட்டு மாதம் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல். கொழும்பு: பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது, இதற்கமைய, ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூலை 6ஆம் திகதி ஆரம்பமாகும் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஜூலை 13 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
-
இலங்கை நலன்புரிச் சங்கம் அல்கசீம் இப்தார் நிகழ்ச்சி 2015
அல்கசீம்: இலங்கை நலன்புரிச் சங்கம் அல்கசீம் இப்தார் நிகழ்ச்சி 2015 சவூதி அரேபியா அல்கசீம் இலங்கை நலன்புரிச் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை 26/06/2015 புரைடாவில் நடாத்தப்பட்ட ரமழான் இப்தார் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
-
ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகேயின் பங்குபற்றலுடன் கர்பலா வீதி புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பம்!
– புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலுள்ள புதிய காத்தான்குடியையும், மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள பாலமுனையையும் இணைக்கும் உள்ளக பிரதான வீதியான ‘கர்பலா வீதி’யை சுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் 50 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யும் வேலைத்திட்டம் (26.06.2015) வெள்ளிக்கிழமை மாலை பாலமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
நாடாளுமன்றம் கலைப்பு; ஆகஸ்ட் 17ஆம் தேதி தேர்தல்
கொழும்பு: நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்தக் கலைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தக் கலைப்பின் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான கூட்டு அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
-
ஹிஸ்புல்லாஹ்வுக்கு றைஹானுல் கவ்ம் எனும் பட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் அதன் பாரம்பரிய கட்டமைப்பை மாற்றாமலும் மேலதிக விஸ்தரிப்புடன் ஸ்ரீலங்கா ஹிறாபௌண்டேஷடன் நிறுவனத்தின் நிதியுதவியுடனும் ,இப் பள்ளி நிருவாகத்தினது ஒத்துழைப்புடனும் புணர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
-
ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூர் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் அதன் பாரம்பரிய கட்டமைப்பை மாற்றாமலும் மேலதிக விஸ்தரிப்புடன் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷடன் நிறுவனத்தின் நிதியுதவியுடனும் ,இப் பள்ளி நிருவாகத்தினது ஒத்துழைப்புடனும் புணர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் மஹிந்தவுக்கும் இடையில் நேற்று இரவு சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை!
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இரவு சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படும் செய்திகள் உண்மையில்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட A 380 விமானம் – 510 பயணிகள் உயிர் தப்பினர்
கொழும்பு: அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று அதிகாலை விமானம் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
கூட்டு பொறியியலாளர் நிறுவனத்தின் கண்காட்சி
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: கூட்டு பொறியியலாளர் நிறுவனத்தின் கண்காட்சி இன்று (2015-06-26)பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பமானது.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தார்.