Category: Your Kattankudy
-
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு பங்களாதேஷ் தகுதி
டாக்கா: ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப் படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது. போட்டியை நடத்தும் நாடு மற்றும் செப்டம்பர் மாத நிலவரப்படி தரவரிசையில் சிறந்த நிலையில் உள்ள முதல் 7 அணிகள் என்று மொத்தம் 8 அணிகள் மட்டுமே இந்த போட்டிக்கு தகுதி பெற முடியும்.
-
நூடில்ஸ் வகைகளை பகுப்பாய்வு செய்ய முடிவு
கொழும்பு: தற்பொழுது சந்தையிலுள்ள மெகீ நூடில்ஸ் உட்பட உடனடியாகத் தயாரிக்கக் கூடிய அனைத்துவகை நூடில்ஸ்களையும் பகுப்பாய்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரசாயனப் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப் படும் நூடில்ஸ்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்பட்டால்
-
20 இன்றும் நாளையும் ஒத்திவைப்பு விவாதம்
கொழும்பு: 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து இன்றும் நாளையும் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மறுசீரமைப்பு குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அது குறித்து ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்கு எதிர்தரப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ள போதும் இறுதியில் இரு நாள் விவாதம் நடத்த
-
இஸ்ரேல்,ஹமாஸ் இருதரப்பு மீதும் போர்க் குற்றச்சாட்டுகள்
ஜெனீவா: காசாவில், 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களின்போது, இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்கள் ஆகிய இருதரப்புமே போர்க் குற்றத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என, ஐ நா விசாரணையாளர்கள் தெரிவிதுள்ளனர். இருதரப்பும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தை மிகக் கடுமையாக மீறியிருந்ததது தொடர்பில், தாம் கணிசமான தகவல்களை திரட்டியதாக, ஐ நாவின் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
-
சவுதி: அல்கசீம் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான இப்தார் அழைப்பிதழ்
அல்கசீம்: சவுதி, அல்கசீம் இலங்கை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 26 ம் திகதி (26/06/2015) வெள்ளிகிழமை நடைபெறும். அல்கசீம் வாழ் அனைத்து சகோதரர்களும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-
காரசாரமான கேள்விகளுக்கு மனம்திறக்கின்றார் ஹரிஸ் எம்.பி! (வீடியோ நேர்காணல்)
அஹமட் இர்ஸாட்:- 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அதற்கு நீங்களும் உங்களது கட்சியும் ஆதரவளித்திருந்தீர்கள். எந்த வகையில் அதற்கு ஆதரவளித்தீர்கள்? அந்த வகையில் இருபதாவது திருத்தச்சட்டமும் அமுல்படுத்தப்பட்டால் அதற்கும் உங்களது கட்சியும் நீங்களும் ஆதரவளிப்பீர்களா?
-
“ஆளுமையற்ற ஒருவனால் உலகில் எதனையும் சாதிக்க முடியாது”: உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா
மருதமுனை: கல்வி என்பது ஒரு மனிதனுடைய புத்தக அறிவை மாத்திரம் இரட்டிப்பாக்குவதன்று மாறாக அவனது பணிகளை வினைத்திறனாக செய்வதற்கான ஆளுமையினை அக்கல்வி அவனுக்கு வழங்க வேண்டும் ஆளுமையற்ற ஒருவனால் உலகில் எதனையும் சாதிக்க முடியாது என்று மருதமுனை புலவர்மணி வித்தியாலத்தில் நடைபெற்ற
-
கொழும்பில் மாட்டிறைச்சி கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
– இர்ஷாத் ரஹ்மதுல்லா கொழும்பு: தலைநகர் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி எனபன உரிய தரத்திலும்,விலையிலும் விற்கப்படாதது தொடர்பில் நுகர்வோர் பல முறைப்பாடுகளை நுகர்வோர் அதிகார சபைக்கு தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,
-
கடுமையான வெயில் பாகிஸ்தானில் 120 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக, 120க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவற்றில் பெரும்பாலான மரணங்கள் கராச்சி நகரில் நிகழ்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கு சமீப காலமாக 113 டிகிரி அளவுக்கு கடும் வெப்பம் நிலவி வருகிறது.
-
“ஆளும் கட்சியில் இருப்பதால் நீங்கள் மிகவும் அழகாக மாறிவிட்டீர்கள்”: அமைச்சர் தலதாவை வர்ணித்த மஹிந்த!
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் தலதா அத்துகோரளவின் அழகை வர்ணித்துள்ளார்.ஆளும் கட்சியில் இருப்பதால், நீங்கள் மிகவும் அழகாக மாறிவிட்டீர்கள் என முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர் தலதா அத்துகோரளவை பார்த்து கூறியுள்ளார்.
-
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வரும் குறியேறிகளை குறைக்க புதிய அமைப்பு
ரோம்: மத்திய தரைக்கடல் வழியாக படகுகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையும் குடியேரிகளின் எண்னிக்கையை குறைக்கும் நோக்கிலான புதிய கடற்படை கண்காணிப்பு அமைப்பு ஒன்றை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் உடன்பாடு எட்டியிருக்கிறார்கள்.
-
ஆப்கான் நாடாளுமன்றம் மீதான தாக்குதல் தொடர்கிறது
காபூல்: ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கார் குண்டு வெடித்தது. அதைத்தொடர்ந்து துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை எதிர்த்த பாதுகாப்புபடையினர், துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்திற்குள்