Category: Your Kattankudy
-
“தன்னளமற்ற பொது நலத்தினை இலக்காக கொண்ட றிசாத் பதியுதீனின் வெற்றிக்கு முசலி மக்கள் களமிறங்குவார்கள்”
– இர்ஷாத் றஹ்மத்துல்லா முசலி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் முசலி மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை வெற்றி பெறகளமிறங்குவதாக முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மத் காமில் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணை சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெற்றி தொடர்பில் பாலக்குளி பிரதேச இளைஞர்கள் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
-
சானியாவின் விம்பிள்டன் கனவு நனவானது
ஹைதராபாத்: விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் சம்பியன் கிண்ணத்தை பெற்ற இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா தனத குடும்பத்தினருடையதும், தன்னுடையதும் கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்று முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவிற்கான சம்பியன் கிண்ணத்தினை இந்திய விராங்கனை சானியா மிர்ஸா மற்றும் சுவிட்சர்லாந்து வீராங்கனை மாட்டினா ஹிங்ஹிஸ் ஜோடி பெற்றுக் கொண்டது.
-
விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படும்
கொழும்பு: வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது. விருப்பு இலக்கங்கள் மாவட்டச் செயலகங்களிலிருந்து தேர்தல் செயலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு சிரேஷ்ட அதிகாரிகளால் அது பரீட்சிக்கப்பட்ட பின் தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்துடன் வேட்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொகமட் தெரிவித்தார்.
-
தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக ஜனாதிபதி அறிவிப்பு
கொழும்பு: பாராளுமன்றத் தேர்தலில் தாம் நடுநிலை வகிக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பதல்ல. ஜனவரி 8 ஆம் திகதி நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்பதே நோக்கமாக வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
-
ஹிட்லர், நெப்போலியனை விடவும் மஹிந்த படுதோல்வியடைவது உறுதி
கொழும்பு: முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போது ஹிட்லர் மற்றும் நெப்போலியன் அடைந்த தோல்விகளைவிடவும் மிகப்பெரிய தோல்வியை மஹிந்த ராஜபக்ஷ இம்முறை குருநாகல் மாவட்டத்தில் சந்திப்பாரென ஐ.தே.க. பேச்சாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் நேற்றுத் தெரிவித்தார்.
-
மட்டக்களப்பு மாநகர சபையில் இன நல்லுறவு இப்தார் நிகழ்வு
– எம்.ஐ.அப்துல் நஸார் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன நல்லுறவு இப்தார் நிகழ்வு நேற்றைய தினம் (14) மட்டக்களப்பு நகர மண்டபத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
-
“மஹிந்தவுக்கும் தனக்கும் தொடர்புகள் இல்லையென ஹிஸ்புல்லா சொல்வது பொய்”: பொறியியலாளர் அப்துர் றஹ்மான்
– புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ் காத்தான்குடி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று சக வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருப்பது, அப்பட்டமான பொய்யாகும். அவருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இப்போதும் நெருக்கமான தொடர்புகள் இருந்து வருவதை எம்மால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் என
-
“விடுதலைப்புலிகளில் இருந்து கருணா அம்மான் விளகிச்சென்றமைக்கு நான் காரணம் அல்ல”: அலிசாஹிர் மெளலானா
அஹமட் இர்ஸாட்:- தமீழீழ விடுதலைப் புலிகளில் முக்கியமான தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் பிரிக்கப்பட்டு அவரினை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு நீங்கள்தான் தரகர் வேலை பார்த்ததாக பரவலான குற்றச்சாட்டானது தமிழ் சமூகத்தினாலும், அரசியல் பிரமுகர்களினாலும் உங்கள் மீது சுமத்தப்படுவது சம்பந்தமாக நீங்கள் அவர்களுக்கு எதனைச் சொல்ல விரும்புக்கின்றீர்கள்?
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு
– நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவரும் வருடாந்த இப்தார் நிகழ்வு இவ்வருடமும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்எம்.ஜாபிர் அவர்களின் தலைமையில் இன்று 2015.07.14 ம் திகதி வைத்தியசாலையில் இடம்பெற்றது.
-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் NFGGயின் ஊடகவியலாளர் சந்திப்பு
– ஏ.எல்.டீன் பைரூஸ், NFGG காத்தான்குடி: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்குப் பிராந்திய தலைமையாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி வெடிக்கச் செய்த ஐஎஸ். தீவிரவாதிகள்!!
– AF- 90 மொசூல்: ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈவு, இரக்கமின்றி ஒரு குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி அதை வெடிக்கச் செய்துள்ளனர்.ஈராக்கில் உள்ள தியாலா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களின் பயிற்சி முகாமில் அதிநவீன வெடிகுண்டுகளை உடலில் எப்படி கட்டி வெடிக்கச் செய்வது என்று செய்து காண்பித்துள்ளனர்.
-
விபத்தில் காயமடைந்த காத்தான்குடி தாயார் காலமானார்
– MJ காத்தான்குடி: கடந்த வாரம் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு காலைநேரம் நோன்புடன் சிகிச்சைக்காகச் சென்றிருந்தவேளை, ஆரையம்பதி பிரதானவீதி மஞ்சள் வீதிக் கடவையைக் கடக்க முற்பட்டவேளையில் விபத்துக்குள்ளாகி, மட்டக்களப்பு அரசாங்க வைத்தியசாலையில் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த பாத்திமா எனும் 64 வயதையுடைய தாயார் இன்று காலமாகியுள்ளார்.