ஹைதராபாத்: விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் சம்பியன் கிண்ணத்தை பெற்ற இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா தனத குடும்பத்தினருடையதும், தன்னுடையதும் கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்று முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவிற்கான சம்பியன் கிண்ணத்தினை இந்திய விராங்கனை சானியா மிர்ஸா மற்றும் சுவிட்சர்லாந்து வீராங்கனை மாட்டினா ஹிங்ஹிஸ் ஜோடி பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் வெற்றிக்களிப்பில் நாடு திரும்பிய சானியாவை ஹைதராபாத் விமான நிலையத்தில் ரசிகர்கள், குடும்பத்தினர் என பலரும் வரவேற்றனர். இதன்போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே சானியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டிற்காக விம்பிள்டன் கிண்ணத்தை பெற்றது மிகவும் மகிழ்சியாக இருப்பதாக தெரிவித்த சானியா, குடும்பத்தினரின் கனவு உண்மையாகியதாகவும் இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்கு சந்தோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது போன்ற விம்பிள்டன் கிண்ணங் கள் பலவற்றை தொடர்ந்தும் பெற்றுக் கொள் வதற்கு தன்னை தயார்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Published by


Leave a comment